வண்டிப்பாளையம் மழையம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மழையம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:தேசிய நெடுஞ்சாலை, வண்டிப்பாளையம், உளுந்தூர்பேட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உளுந்தூர்பேட்டை
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
தாயார்:மழையம்மன், கரிக்கிலமர்ந்தாள்
சிறப்புத் திருவிழாக்கள்:தீமிதி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதிமூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:காடவராய குறுநில மன்னர்கள்

அருள்மிகு மழையம்மன் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வண்டிப்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] இங்கு மூலவராக மழையம்மன் உள்ளார். இத்திருத்தலத்தில் ஆண்டுகள்தோறும் ஆடி மாதத்தில் சாகை வார்த்தல் சேவை நடைபெறும். சிறப்பு உற்சவமாக தேரோட்டமும் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.

வரலாறு[தொகு]

இக்கோயில் பதிமூண்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]இக்கோயிலில் சேந்தமங்கலத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த காடவ மன்னர்களின் குலதெய்வமாக இருந்துவந்துள்ளது அவர்கள் கரிக்கிலமர்ந்தால் என்ற தெய்வமாக வழிபட்டுவந்துள்ளார்கள்,காலப்போக்கில் அந்த ஆலயம் இப்பொழுது மழையம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கோயில் அமைப்பு[தொகு]

பழைய கோயில் சிதைவுண்ட நிலையில்,புதிய கோயில் கட்டிமுடிக்கப்பட்டு 27-10-2-2010 அன்று குடமுழுக்கு நடத்தப்பட்டது.

[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சேந்தமங்கலம் சிவாச்சார்யார் குடும்பத்தால் சேவையாக ஒருகாலப் பூஜையானதும் நடக்கின்றது வண்டிப்பாளையம் சுப்ரமண்யபடையாச்சிex MLA அவர்கள் குடும்பத்தால் பூசாளி மற்றும் பணியாட்கள் நியமித்து ஆலயம் பரம்பரையாக நிர்வகிக்கப்படுகிறது சித்திரை மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)