வணிக மேம்பாட்டு மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு வணிக மேம்பாட்டு மாதிரி யானது ஒரு வர்த்தக நிறுவனம் எவ்வாறு தனது மதிப்புகளை,[1] அதாவது பொருளாதார, சமூக அல்லது பிற மதிப்புகளை உருவாக்குகிறது, வழங்குகிறது மற்றும் கைக்கொள்கிறது என்தன் தத்துவத்தை விவரிக்கிறது. வணிக மாதிரியை வடிவமைக்கும் நடைமுறையானது வணிக செயல் தந்திரத்தின் ஒரு பகுதியாகும்.

கருத்தியலிலும், நடைமுறையிலும் வணிக மேம்பாட்டு மாதிரி எனும் வரைமுறையானது நோக்கம், அளிப்புக்கள், செயல் தந்திரங்கள், உட்கட்டமைப்பு, நிறுவன கட்டமைப்புக்கள், வர்த்தக நடைமுறைகள் மற்றும் இயக்க வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் உட்பட பல முக்கிய வணிக அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையற்றும், முறையாகவும் செய்யப்படும் விரிவான விவரிப்புக்களுக்கு பயன்படுகிறது.

வரலாறு[தொகு]

வணிக மேம்பாட்டு மாதிரிகளின் உருவாக்கத்தின் ஒரு சுருக்க வரலாறு பின் வருமாறு தொடரலாம். அதிகம் அறியப்பட்ட, அதிகம் அடிப்படையான வணிக மேம்பாட்டு மாதிரி கடைக்காரர் மாதிரியாகும்[சான்று தேவை]. இது சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் இருக்கக் கூடிய இடத்தில் ஒரு கடையினை நிறுவி பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிக்கு வைப்பதை உள்ளிட்டுள்ளது.

காலங்கள் கடந்து, வணிக மேம்பாட்டு மாதிரிகள் மிக அதிகமாக நவீனமாகிவிட்டன. பெயிட் அண்ட் ஹூக் வணிக மேம்பாட்டு மாதிரி ("ரேஸர் அண்ட் ப்ளேட்ஸ் வணிக மேம்பாட்டு மாதிரி அல்லது "டைட் புராடக்ட்ஸ் வணிக மேம்பாட்டு மாதிரி" எனவும் குறிக்கப்படுவன) 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு அடிப்படைப் பொருளை மிகக் குறைவான விலைக்கு அளித்து, பலமுறை இழப்பிற்கு (பெயிட்), பிறகு மறு நிரப்பல் செய்ய, தொடர்புடைய பொருட்கள் அல்லது சேவைகளுக்கு(ஹூக்) ஈடுசெய்யும் தொகையினை விதிப்பதை உள்ளிட்டிருக்கிறது. உள்ளடங்கும் உதாரணங்கள்: ரேஸர் (பெயிட்) மற்றும் பிளேட் (ஹூக்), செல் போன்கள் (பெயிட்) மற்றும் பயன்பாட்டு கால அளவு (ஹூக்), கணிணி அச்சுப்பொறிகள் (பெயிட்) மற்றும் மை உருளை மறு நிரப்பல்கள் (ஹூக்) மற்றும் புகைப்படக் கருவி (பெயிட்) மற்றும் புகைப்பட நகல்கள் (ஹூக்). இந்த மாதிரியின் சுவாரஸ்யமான மாறுபாடு என்பது மென்பொருள் உருவாக்கத்தில் அதன் வேர்ட் புராசசர் ரீடரை இலவசமாக அளித்து ஆனால் அதன் வேர்ட் புராசசர் ரைட்டருக்கு பல நூறு டாலர்களை கட்டணமாக விதிப்பதில் உள்ளது.

1950 ஆம் ஆண்டுகளில், புதிய வணிக மேம்பாட்டு மாதிரிகள் மெக்டொனால்ட்டின் உணவு விடுதிகள் மற்றும் டொயோட்டா ஆகியோரிடமிருந்து வந்தது. 1960களின் கண்டுபிடிப்பாளர்கள் வால்-மார்ட் மற்றும் பேரங்காடிகளாவர். 1970களில் புதிய வணிக மேம்பாட்டு மாதிரிகள் ஃபெடெக்ஸ் மற்றும் டாய்ஸ் ஆர் யூ ஆகியோரிடம் காணப்பட்டன; அதேப்போல 1980களின் மாதிரிகள் பிளாக்பஸ்டர், ஹோம் டிபோட், இண்டெல் மற்றும் டெல் கம்ப்யூட்டர் ஆகியனவாகும்; 1990களில் மாதிரிகள் சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், நெட்பிளிக்ஸ், ஈ-பே, அமேசான்.காம் மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியோரிடமிருந்து வந்தன. மோசமாக திட்டமிடப்பட்ட வணிக மேம்பாட்டு மாதிரிகள் பல டாட்-காம்களுக்கு (இணைய தளங்களுக்கு) பிரச்சினைகளாயின.

இன்று, வணிக மேம்பாட்டு மாதிரிகள் எவ்வாறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சார்ந்துள்ளதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, இணைய தளங்களின் தொழில் முனைவோர்களும் கூட முழுமையாக புதிய மாதிரிகளை முற்றிலும் நிகழ்விலுள்ள அல்லது தோன்றி வரும் தொழில் நுட்பத்தைச் சார்ந்துள்ளவையாக உருவாக்கியுள்ளனர். தொழில் நுட்ப பயன்பாட்டைப் பயன்படுத்தி, வணிகங்கள் பேரளவிலான வாடிக்கையாளர்களை குறைந்த பட்ச செலவில் அடையலாம்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

வணிக மேம்பாட்டு மாதிரி வடிவமைப்பு வார்ப்புரு[தொகு]

வணிகத்தின் முறையான விவரிப்புக்கள் அதன் நடவடிக்கைகளுக்கான கட்டுமானப் பகுதிகளாக ஆயின. பல்வேறுபட்ட வணிக கருத்துருவாக்கங்கள் உள்ளன; ஆஸ்டர்வால்டர்ஸ்சின் பணி மற்றும் ஆய்வுக்கட்டுரையானது (2010[2], 2004[3]) ஓர் ஒற்றைக் குறிப்பு மாதிரியை முன்மொழிகிறது. அது பல விரிவான வணிக மாதிரி கருத்துருவாக்கங்களின் ஒத்தத்தன்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவரது வணிக மாதிரி வடிவமைப்பு வார்ப்புரு வுடன் ஒரு நிறுவனமானது அவற்றின் வணிக மேம்பாட்டு மாதிரியை எளிதாக விவரிக்கிறது.

 • உள்கட்டமைப்பு
  • முக்கிய நடவடிக்கைகள்: ஒரு நிறுவனத்தின் வணிக மாதிரியை நிறைவேற்ற நடவடிக்கைகள் கட்டாயமாகின்றன.
  • முக்கிய வளங்கள்: வாடிக்கையாளருக்கு ஒரு மதிப்பினை உருவாக்க அவசியமாகும் வளங்கள்.
  • பங்குதாரர் வலையமைப்பு: வணிகக் கூட்டணிகளே வணிகத்தின் மாதிரியை முழுமையாக்கும் இதர அம்சமாகும்.
 • அளிப்புகள்
  • மதிப்பு முன்மொழிதல்: ஒரு வணிகத்தின் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள். ஆஸ்டர்வால்டரை மேற்கோள்காட்டும் (2004), ஒரு மதிப்பு கருத்தாக்கம் என்பது " ஒரு ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாணமாகும் அவை ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவிற்கு இணைந்தவாரே மதிப்பினை பிரதிநிதித்துவம் செய்கின்றன. இதுவே ஒரு நிறுவனத்தை அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தி விவரிக்கிறது, மேலும் வாடிக்கையாளர்கள் ஏன் பிற நிறுவனங்களிடமிருந்து வாங்காமல் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து வாங்குகின்றனர் என்பதற்குக் காரணமாகவும் உள்ளது."
 • வாடிக்கையாளர்கள்
  வணிக மாதிரி பிரசாரம்: நைன் பிசினஸ் மாடல் பில்டிங் ப்ளாக்ஸ் (Nine business model building blocks), ஆஸ்டர்வால்டர், பிக்நியர் (Pigneur) மற்றும் பலர். 2010[1]
  • வாடிக்கையாளர் பிரிவுகள்: வணிகத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான இலக்கு கூட்டமாவர்.
  • விநியோகப் பாதைகள்: ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை இவ்வழிமுறைகள் மூலம் விநியோகிக்கிறது. இது நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக செயல் தந்திரத்தை உள்ளடக்கியுள்ளது.
  • வாடிக்கையாளர் தொடர்பு: இது ஒரு நிறுவனமானது அதற்கும் அதன் பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் இடையேயான இணைப்புக்களை நிறுவுவதாகும். வாடிக்கையாளர் தொடர்புகளை நிர்வகிக்கும் நடைமுறையானது வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை என குறிக்கப்படுகிறது.
 • நிதி நிலைமைகள்
  • செலவு கட்டமைப்பு: வணிக மாதிரியில் அமர்த்தப்பட்ட வழிமுறைகளின் பணவியல் விளைவுகளே, இவை. ஒரு நிறுவனத்தின் வர்த்தகத் துறை.
  • வருவாய் போக்குகள்: ஒரு நிறுவனம் பல்வேறு வருமான பெருக்கங்களின் மூலம் பணம் ஈட்டும் வழிமுறையாகும். ஒரு நிறுவனத்தின் வருமானம்.

பயன்பாடுகள்[தொகு]

MITயின் மலோன் மற்றும் பிறர்.[2] அவர்களால் விளக்கப்பட்ட சில வணிக மாதிரிகள் உண்மையில் பிறரை விட சிறப்பாக செயல்பட்டனர். அவற்றை பெரிய அமெரிக்க நிறுவனங்களைக் கொண்டிருக்கும் தரவுத் தொகுப்பில், 1998 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு தொடர்ந்த வருடங்களின் காலத்தில் கண்டனர். அதே சமயம் அவை ஒரு வணிக மாதிரியின் இருத்தல் பொருட்படுத்தப்படுகின்றதா என்பதையும் நிரூபிக்கவில்லை.

தொடர்புடைய கருத்தாக்கங்கள்[தொகு]

வணிக மாதிரியின் வடிவமைப்பின் வழிமுறை வணிக செயல்தந்திரத்தின் ஒரு பகுதியாகும். ஒரு நிறுவனத்தின் வணிக மாதிரியை நிறுவனத்தின் கட்டமைப்பிற்குள்ளாக அமல்படுத்துவது (எ.கா. அமைப்பாக்க சாத்தியமுள்ளவை, வேலைப்பகிர்வுகள், மனித வளங்கள்) மற்றும் அமைப்புகள் (எ.கா. தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, உற்பத்திக் கூடங்கள்) நிறுவனத்தின் வணிக இயக்கங்களின் ஒரு பகுதியாகும்.

வணிக மாதிரியாக்கம் பொதுவாக இயக்க நிலையிலுள்ள வணிக வழிமுறை வடிவமைப்பை குறிப்பிடுகிறது என்பது புரிந்துக் கொள்ள முக்கியமானதாகும், அவ்வாறே வணிக மாதிரிகள் மற்றும் வணிக மாதிரி வடிவமைப்பு ஒரு நிறுவனத்தின் வணிக தர்க்கத்தை செயல்தந்திர மட்டத்தில் குறிப்பிடுகிறது.

வர்த்தகப் பெயர் என்பது வணிக மாதிரியின் விளைவே ஆகும். அதுமட்டுமின்றி வர்த்தகப் பெயருக்கும் சார்ந்துள்ள தொடர்பும் உள்ளது. ஏனெனில் வணிக மாதிரியே வர்த்தகப் பெயரின் உத்தரவாதங்களைத் தீர்மானிக்கிறது, மேலும் வர்த்தகப் பெயரின் குணாம்சமே வணிக மாதிரியின் அம்சமாக அமைகிறது. இதனை நிர்வகிப்பதே ஒருங்கிணைப்பு சந்தையாக்கலின் வேலையாகும்.

மேலும் காண்க[தொகு]

மேலும் படிக்க[தொகு]

 • The Role of the Business Model in capturing value from Innovation: Evidence from XEROX Corporation’s Technology Spinoff Companies. , H. Chesbrough and R. S. Rosenbloom , Boston, Massachusetts, Harvard Business School, 2002.
 • Leading the revolution. , G. Hamel, Boston, Harvard Business School Press, 2000.
 • Changing Business Models: Surveying the Landscape , J. Linder and S. Cantrell, Accenture Institute for Strategic Change, 2000.
 • Developing Business Models for eBusiness. , O. Peterovic and C. Kittl et al., International Conference on Electronic Commerce 2001, 2001.
 • Place to space: Migrating to eBusiness Models. , P. Weill and M. R. Vitale, Boston,Harvard Business School Press, 2001.
 • Value-based Requirements Engineering - Exploring Innovative e-Commerce Ideas , J. Gordijn, Amsterdam, Vrije Universiteit, 2002.
 • Internet Business Models and Strategies , A. Afuah and C. Tucci, Boston, McGraw Hill, 2003.
 • Focus Theme Articles: Business Models for Content Delivery: An Empirical Analysis of the Newspaper and Magazine Industry , Marc Fetscherin and Gerhard Knolmayer, International Journal on Media Management, Volume 6, Issue 1 & 2 September 2004 , pages 4 – 11, September 2004.
 • Business Model Generation , A. Osterwalder, Yves Pigneur, Alan Smith, and 470 practitioners from 45 countries, self published, 2009
 • Emerging Business Online: Global Markets and the Power of B2B Internet Marketing , Lara Fawzy and Lucas Dworski, Wharton School Publishing, 2010

மேற்குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Business Model Generation , A. Osterwalder, Yves Pigneur, Alan Smith, and 470 practitioners from 45 countries, self published, 2010
 2. Do Some Business Models Perform Better than Others? , Malone et al., May 2006