ஸ்டார்பக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ் கார்பொரேசன் என்பது அமெரிக்க நாட்டின் குளம்பி (காபி) நிறுவனம் ஆகும்.[1] இந்தப் பெருங்குழுமம் உலகத்தில் பரவலாக தன் கிளை அமைப்புகளைக் கொண்டு இயங்கும் சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் ஆகும். சூடான குளம்பி, குளிர்ந்த குளம்பி,  பனிக் குழைவு, பிசுக்கட்கள் போன்ற தின்பண்டங்களையும் விற்பனை செய்கின்றது.

1971இல் ஜெர்ரி பால்ட்வின்  செவ் சிகிள், கார்டன் போவ்கர்  ஆகிய சான் பிரான்சிசுகோ பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து இந்தக் குழுமத்தைத் தொடங்கினார்கள்.

[2]

இதன் முதன்மைச் செயல் அதிகாரியாக ஏப்பிரல் 2017 முதல் கெவின் ஜான்சன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். சியாட்டிலில் உள்ள பைக் பிளேஸ் என்ற பகுதியில் முதலில் தொடங்கிய ஸ்டார்பக்ஸ் குளம்பிக் கடையைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உலகம் பூராவும் 25000க்கு மேல் கிளைகள் உள்ளன. [3]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்பக்ஸ்&oldid=3887984" இலிருந்து மீள்விக்கப்பட்டது