வட்டாராதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்டாராதனை (Vaddaradhane) என்பது கன்னடத்தின் முதல் உரைநடை நூலாகும். இதை சிவகோட்டாச்சார் என்பவர் எழுதினார். இது பத்தொன்பது கதைகள் உள்ளடங்கிய நூலாகும். இது ஹரிசேனரின் பிரஹாத்கதாகோசாவை அடிப்படையாகக் கொண்டது.

விளக்கம்[தொகு]

இது சரவணபெலகுளாவுக்கு வந்த பத்திரபாகுவின் வாழ்க்கை பற்றி விரிவாக கூறுகிறது. இந்த நூல் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் சில அறிஞர்கள் இது அதற்கும் முந்தைய ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த்து என்கின்றனர். அகச்சான்றுகளின் அடிப்படையில் சிவாக்கோதிய்யா, நவீன கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள கோகலியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.[1]

இதில் உள்ள 19 கதைகளின் பட்டியல்

  1. சுகுமார சுவாமியின் கதை
  2. சுகாசுசுலா சுவாமியின் கதை
  3. கஜகுமாரா
  4. சாந்தகுமார இளவரசன்
  5. அன்னி கவ்ருதா
  6. பத்ரபாவு பத்ர்ராரா
  7. லலிதகதே
  8. தர்மகோசா
  9. ஸ்ரீதின்னியா பத்ராரா
  10. விருஷப சேன பத்தரரா
  11. கர்த்தகா ரிஷி
  12. அபய கோஷ ரிஷி
  13. வித்யுத்சோர ரிஷி
  14. குருதாதா பட்டராரா
  15. சில்லடா புத்ரா
  16. தண்டகா ரிஷி
  17. மஹேந்ரதத்தாச்சாரியனந்த்
  18. சணக்ய ரிஷி
  19. விருஷபாசேனர் ரிஷி

குறிப்புகள்[தொகு]

  1. Sahitya Akademi (1992), p. 4027

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டாராதனை&oldid=2454491" இலிருந்து மீள்விக்கப்பட்டது