வடிவவியல் வடிவம்
வடிவவியல் வடிவம் (geometric shape) என்பது ஒரு வடிவவியல் பொருளை விளக்கும் தகவல்களிலிருந்து அதன் அமைவிடம், அளவு, திசைப்போக்கு மற்றும் எதிரொளிப்பு ஆகியவற்றை நீக்கிவிட எஞ்சி நிற்கும் தகவல்கள் அடங்கியதாகும். அதாவது, ஒரு வடிவவியல் வடிவத்தை நகர்த்துவது பெரிதாக்குவது, சுழற்றுவது அல்லது எதிரொளிப்பது போன்ற செயல்களால் அதன் மூல வடிவம் மாறாமல் இருக்கும்.[1]
பல இருபரிமாண வடிவவியல் வடிவங்களைபுள்ளிகள், உச்சிகள், மூடிய சங்கிலித்தொடராக புள்ளிகளை இணைக்கும் கோடுகள், இக்கோடுகளால் உண்டாகும் வடிவினுள் அமையும் உட்புள்ளிகள் ஆகியவற்றின் தொகுப்பாகக் கொள்ளலாம். இவ்வடிவங்கள் பல்கோணிகள் என அழைக்கப்படுகின்றன. முக்கோணங்கள், சதுரங்கள், ஐங்கோணிகள் பல்கோணிகளில் சில வகைகளாகும். வேறு சிலவகையான வடிவங்கள் கோடுகளுக்குப் பதிலாக வலைகோடுகளால் உருவாகின்றன. இவ்வாறு வளைகோடுகளால் அடைபெறும் வடிவவியல் வடிவங்களுக்கு எடுத்துக்காட்டுள் வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்றவைகளாகும்.
முப்பரிமாண வடிவவியல் வடிவங்களை உச்சிகள், உச்சிகளை இணைக்கும் கோடுகள் (விளிம்புகள், இவ்விளிம்புகளால அடைபெறும் இருபடிமாண முகங்கள் வடிவினுள் அமையும் உட்புள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டு வரையறுக்காலாம். இவை பன்முகத்திண்மங்களென அழைக்கப்படுகின்றன. கனசதுரங்கள் பட்டைக்கூம்புகள் உட்பட்ட நான்முகிகள் பன்முகத்திண்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். வேறு சில முப்பரிமாண வடிவங்கள் கோடுகளுக்குப் பதிலாக வளைபரப்புகளால் அடைபெறும் முப்பரிமாண வடிவவியல் வடிவங்களும் உள்ளன. நீளுருண்டை, கோளம் இரண்டும் இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
ஒரு பன்முகியின் விளிம்பின் மீதுள்ள புள்ளிகள் அனைத்தும் அந்த வடிவத்தின் பாகமாகவே அமையுமானால் அப் பன்முகியானது குவிவுப் பன்முகி எனப்படும்.
பண்புகள்
[தொகு]- முற்றொத்தவை: சுழற்சி, இடப்பெயர்ச்சி, எதிரொளிப்பு போன்ற உருமாற்றச் செயல்களால் இரு வடிவவியல் வடிவங்களில் ஒன்றை மற்றொன்றாக உருமாற்ற முடியுமானால் அவையிரண்டும் "முற்றொத்த" அல்லது "சர்வசமமான" வடிவங்கள் எனப்படும்.
- வடிவொப்புமை: சுழற்சி, இடப்பெயர்ச்சி, எதிரொளிப்பு போன்ற உருமாற்றச் செயல்களோடு சீரான அளவு மாற்ற உருமாற்றச் செயலையும் மேற்கொண்டு ஒரு வடிவத்தை மற்றொன்றாக உருமாற்ற முடிந்தால் அவையிரண்டும் "வடிவொத்த வடிவங்கள்" எனப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kendall, D.G. (1984). "Shape Manifolds, Procrustean Metrics, and Complex Projective Spaces". Bulletin of the London Mathematical Society 16 (2): 81–121. doi:10.1112/blms/16.2.81.