வடக்கு பட்டன் தீவு தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு பட்டன் தீவு தேசிய பூங்கா (North Button Island National Park) என்பது இந்தியாவின் கடற்கரையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள தேசிய பூங்காவாகும். இந்த பூங்கா சுமார் 44 சதுர மைல்கள் (114 km2) பரப்பளவில் கடல்பசு, ஒங்கில்களின் உறைவிடமாக உள்ளது.

வடக்கு பட்டன் தீவு தேசிய பூங்கா 1979ஆம் ஆண்டு அந்தமான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. இது அருகிலுள்ள நகரமான லாங் தீவிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் போர்ட் பிளேர் ஆகும், இது 90 km (56 mi) தொலைவில் அமைந்துள்ளது. பூங்காவினைப் பார்வையிடச் சிறந்த மாதங்கள் டிசம்பர் முதல் மார்ச் வரை ஆகும். பட்டன் தீவுகளுக்குச் சொந்தமான வடக்கு பட்டன் தீவின் பரப்பளவு 19.5 ha (48 ஏக்கர்கள்) ஆகும்.

தாவரங்களும் விலங்கினங்களும்[தொகு]

இங்கு காணப்படும் விலங்கினங்கள் கடல்பசு, ஓங்கில், நீர் உடும்பு, பல்லி போன்றவையாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "North Button Island National Park complete detail – updated". NatureConservation.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-10. Archived from the original on 2022-09-26. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.