பட்டன் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்டன் தீவுகள் (Button Islands) என்பது ஒர் தீவுக்கூட்டமாகும். இத்தீவுகள் அந்தமான் நிகோபார் தீவுகள் கூட்டத்தில் அமைந்துள்ளவை ஆகும். பட்டன் வடக்கு அந்தமான் நிர்வாகத்தின் கீழ்வரும் மாவட்டமாகும். அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளாகும்.[1]

வரலாறு[தொகு]

பட்டன் தீவில் பல்வேறு கலங்கரை விளக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. வடக்கு பட்டன் தீவுகள் வடக்கு பட்டன் தீவிலுள்ள மிக உயரமான கலங்கரை விளக்கம் 48 மீட்டர் (157 அடி) உயரமான மலையின் மீது 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. [2]
நடு பட்டன் தீவிலுள்ள மிக உயரமான கலங்கரை விளக்கம் 50 மீட்டர் (164 அடி) உயரமான மலையின் மீது 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[3]
மேலும் தெற்கு பட்டன் தீவில் 36 மீட்டர் (118 அடி) உயரமுடைய மலை கலங்கரை விளக்கம் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[4]

புவியியல்[தொகு]

இத்தீவு ரிச்சி ஆச்சிபெலகோ அவருக்கு சொ ந்தமானதாகும். மேலும் இது அவுட்ராம் தீவின் வடக்கே அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நீரில் மூழ்கும் பவளப்பாறைகள், ஓங்கில்கள், ஆவுளியா, மற்றும் நீலத்திமிங்கலம் போன்ற முக்கியமான கடல் விலங்குகள் பாதுகாக்கப்படவேண்டிய விலங்குகள் ஆகும். இத்தீவு பல்வேறு வகையான உயிரினங்களுக்கும்,பறவைகளுக்கும் மற்றும் மீன்களுக்கும் வாழ்விடமாக உள்ளது. இங்கு கடலில் மூழ்கியுள்ள பவழப்பாறைகள் அதிகமாக காணப்படுகின்றன.[5]

அரசியல்[தொகு]

பட்டன் தீவுகள் அரசியல் ரீதியாக போர்ட் பிளேர் தாலுக்காவில் அமைந்துள்ளது. ராணி சாண்சி கடல் தேசிய பூங்கா இத் தீவுகளுக்கு அருகில் காணப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Village Code Directory: Andaman & Nicobar Islands". Census of India. பார்த்த நாள் 2011-01-16.
  2. "Government of India, Directorate General of Lighthouses and Lightships.". www.dgll.nic.in. பார்த்த நாள் 2016-10-18.
  3. "Government of India, Directorate General of Lighthouses and Lightships.". www.dgll.nic.in. பார்த்த நாள் 2016-10-18.
  4. "Government of India, Directorate General of Lighthouses and Lightships.". www.dgll.nic.in. பார்த்த நாள் 2016-10-18.
  5. [1]
  6. "DEMOGRAPHIC – A&N ISLANDS". andssw1.and.nic.in. பார்த்த நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டன்_தீவுகள்&oldid=2751563" இருந்து மீள்விக்கப்பட்டது