வஜ்ரேஸ்வரி தேவி கோயில், காங்கரா

ஆள்கூறுகள்: 32°06′07″N 76°16′12″E / 32.10183°N 76.26987°E / 32.10183; 76.26987
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கரா தேவி / மா பஜ்ரேஸ்வரி
கோயிலின் முதன்மை நுழைவாயில்
வஜ்ரேஸ்வரி தேவி கோயில், காங்கரா is located in இமாச்சலப் பிரதேசம்
வஜ்ரேஸ்வரி தேவி கோயில், காங்கரா
இமாச்சலப்பிரதேசத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்:காங்ரா மாவட்டம்
அமைவு:காங்ரா, காங்ரா தேவி, 176001
ஏற்றம்:738.33 m (2,422 அடி)
ஆள்கூறுகள்:32°06′07″N 76°16′12″E / 32.10183°N 76.26987°E / 32.10183; 76.26987
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை

காங்கரா தேவி மந்திர் என்றும் அழைக்கப்படும் பஜ்ரேஸ்வரி (அல்லது வஜ்ரேஸ்வரி) மாதா மந்திர் என்பது வட இந்திய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்ரா நகரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இது துர்க்கையின் வடிவமான வஜ்ரேஸ்வரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இடம்[தொகு]

வஜ்ரேஸ்வரி தேவி சக்திபீடம் காங்கரா

வஜ்ரேஸ்வரி கோயில் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் காங்ரா நகரில் அமைந்துள்ளது. இது காங்ரா நகரின் காங்கரா மந்திர் மற்றும் காங்கரா ஆகிய இரண்டு தொடருந்து நிலையங்களிலிருந்தும் மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காங்க்ரா வானூர்தி நிலையம் கோயிலில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் காங்ரா கோட்டை அருகில் அமைந்துள்ளது.

தொன்மக்கதைகள்[தொகு]

தாட்சாயிணி தன் தந்தையின் யாகத்தில் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காத சர்ச்சையில் தீயில் தன்னை மாய்த்துக் கொண்டதாக ஒரு தொன்மக் கதை கூறுகிறது. தாட்சாயணியின் உடலை சிவன் தன் தோளில் எடுத்துக்கொண்டு தாண்டவத்தைத் தொடங்கினார். உலகை அழிவைத்தைத் தடுக்க, விஷ்ணு தாட்சாயணியின் உடலை தனது சக்கரத்தால் 51 துண்டுக வெட்டினார். சதியின் இடது மார்பகம் இந்த இடத்தில் விழுந்தது, இதனால் இது ஒரு சக்தி பீடமாக மாறியது. ஞானார்ணவ தந்திரம் இந்த சக்திபீடத்தை "பிருகுபுரி சக்திபீடம்" என்று குறிப்பிட்டுள்ளது. பிருஹத் நிலா தந்திரத்தின்படி, இந்த சக்திபீடத்தின் தேவி " வ்ரஜேஸ்வரி " ஆவார் . இந்த இடம் குப்தபுரா என்று அழைக்கப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

மூலக் கோயில் மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு நாள் பாண்டவர்கள் தங்கள் கனவில் துர்கையைக் கண்டதாகவும், அதில் அவர் நாகர்கோட் கிராமத்தில் இருப்பதாகவும், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், அந்த பகுதியில் அவருக்கு ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அதே இரவில் நாகர்கோட் கிராமத்தில் அவளுக்கு ஒரு அற்புதமான கோயிலைப் பாண்டவர்கள் கட்டினர் என்ற செவிவழிக் கதை நிலவுகிறது. 1905 ஆம் ஆண்டில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கோயில் அழிந்தது. பின்னர் அரசாங்கத்தால் மீண்டும் கட்டப்பட்டது.

கோவில் அமைப்பு[தொகு]

பிரதான வாயில் நுழைவாயில் நாகர்கானா என்னும் முரசு இல்லம் போல உள்ளது. மேலும் இது பஸ்சின் கோட்டை நுழைவாயிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலையும் கோட்டை போன்ற கல் சுவர் சூழ்ந்துள்ளது. அக்பர் காலத்தில் தயாள் பகத் தனது தலையை தேவிக்காக அர்ப்பணித்தார். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுளது. வெள்ளை வண்ணப் பூச்சுடனான சுவர்களால் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் கோபுரம் ஒடிசா பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இசுலாமிய கட்டடக் கலையை நினவூட்டும் விதமான தாழி விமானம், அரைவட்ட வளைவு கொண்ட விமானம் என வித்தியாசமாக காட்சியளிக்கிறது. கோயிலின் வாயிலின் வெண்கலத்தால் செய்யப்பட்ட இரண்டு சிங்கச் சிலைகள் நிற்கின்றன.[2]

முதன்மைக் கோயிலின் உள்ளே வஜ்ரேஸ்வரி தேவி கல் (பிண்டி) வடிவில் இருக்கிறார். இக்கோயிலில் சிறிய பைரவர் கோயிலும் உள்ளது. முதன்மைக் கோவிலின் வசலில் தயான் பகத் என்பவரின் சிலை உள்ளது.

திருவிழாக்கள்[தொகு]

சனவரி இரண்டாவது வாரத்தில் வரும் மகர சங்கராந்தி கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகிசாசுரனை போரில் கொன்ற தேவிக்கு அப்போது சில காயங்கள் ஏற்பட்டதாக தொன்மம் கூறுகிறது. அந்த காயங்களை போக்க, நாகர்கோட்டில் தேவி தன் உடலில் வெண்ணெயை பூசிக்கொண்டாள். இதனால் அந்நாளைக் குறிக்கும் வகையில் அம்மனுக்கு வெண்ணெய்க் காப்பு அபிசேகம் செய்யப்பட்டு, கோயிலில் ஒருவாரம் திருவிழா நடத்தப்படுகிறது.

நிர்வாகம்[தொகு]

இக்கோயில் இந்திய அரசால் பராமரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Śākta Pīṭhas
  2. "நவராத்திரி சிறப்புக் கட்டுரை: காங்கரா பள்ளத்தாக்கில் சக்தி பீடங்கள்". 2023-10-12. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)