வங்க ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்க ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் லிமிடெட்
Bengal Chemicals and Pharmaceuticals
बंगाल केमिकल्स एंड फार्मास्युटिकल्स
বেঙ্গল কেমিক্যালস এবং ফার্মাসিউটিক্যালস
நிறுவுகைபிரித்தானிய இந்தியா, கல்கத்தா (ஏப்ரல் 12, 1901; 123 ஆண்டுகள் முன்னர் (1901-04-12))
உற்பத்திகள்மருத்துவமனை
இரசகற்பூர உருண்டைகள்
பினாயில்
வருமானம் 100 கோடிகள் (2014-15)
உரிமையாளர்கள்இந்திய அரசு
இணையத்தளம்bengalchemicals.gov.in

பெங்கால் கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் (Bengal Chemicals and Pharmaceuticals Limited (BCPL), என்பது 1901 இல் துவக்கப்பட்ட இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் மற்றும் இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆகும். இந்நிறுவனத்தை இந்திய வேதியியல் தந்தை எனப்படும் பிரபுல்ல சந்திர ரே கல்கத்தாவில் துவக்கி வீட்டு உபயோகப் பொருட்களான "Hospitol", "இரசகற்பூர உருண்டைகள்", "பினாயில்" போன்ற பொருட்களைத் தயாரித்தார். இந்த நிறுவனத்தின் தலைமையகம் கல்கத்தாவில் உள்ளது. 2006 ஆம் நிதியாண்டில் ₹ 61,99 பில்லியன் (அமெரிக்க $ 920 மில்லியன்) திரட்டப்பட்டதாக வருவாய் அறிக்கையால் தெரியவருகிறது..[1] [2]

கொல்கத்தாவின் மணிக்கட்டலாவில் உள்ள பிசிபீஎல் நிறுவன முதன்மை வாயில்

வரலாறு[தொகு]

பெங்கால் கெமிக்கல் & பார்மசூடிகல் ஒர்க் லிமிடெட். (BCPW) என்ற நிறுவனமே தற்போதைய பெங்கால் கெமிக்கல்ஸ் & பார்மசூடிகல் லிமிடெட் (BCPL) நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்தது. ஆச்சார்யா பி சி ரே கல்கத்தாவின் 91 அப்பர் சர்குலர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ₹ 700 ($ 10) மூலதனத்தைக் கொண்டு ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் புகழ் வளர்ந்தது, இதனால் ஆச்சார்யா பி சி ரே நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நிறுவனத்தில் மேலும் முதலீட்டை போட்டார். விரைவில் வணிக நிறுவனம் வளர்ந்து ஒரு லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டது நிறுவனத்தின் பெயர் 1901 ஏப்ரல் 12 இல் 91 பெங்கால் கெமிக்கல் & பார்மசூடிகல் ஒர்க் லிமிடெட் என்ற பெயர் சூட்டப்பட்டது. நிறுவனம் கல்கத்தாவின் அப்பர் சர்குலர் சாலையில் இருந்த அதே வளாகத்தில் இயங்கியது.[3] [4]

கல்கத்தாவின் கணிகட்டலாவில் 1905 இல் முதல் தொழிற்சாலை துவக்கப்பட்டது, மேலும் மூன்று தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன. இதில் ஒன்று பனிஹதி (கல்கத்தா-700114 (வடக்கு புறநகர்), மேற்கு வங்காளம்) 1920 இலும், மும்பையில் 1938 இலும், கான்பூரில் 1949 இல் துவக்கப்பட்டன. பதிவுபெற்ற அலுவலகம் 6 கணேஷ் சுந்தர் அவென்யூ, கொல்கத்தா – 700 013 என்ற முகவரியில் இயங்கியது. இந்த நிறுவனம் ஒன்பது விற்பனை நிலையங்கள் மற்றும் இந்தியா முழுவதும் இரண்டு சி & எஃப் ஏஜன்சிகள் கொண்டிருந்தது.

இந்நிறுவனம் 1977 திசம்பர் 15 ம் தேதி இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது அதன்பிறகு 1980 திசம்பர் 15 அன்று தேசியமயமாக்கப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்டபின் புதிய நிறுவனமாக 1981 இல் “பெங்கால் கெமிக்கல்ஸ் & பார்மச்சூடிகள் லிமிடெட்.” (BCPL) என பெயர் மாற்றப்பட்டது.

நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பல பொருட்கள் தயாரிக்கும்விதமாக மூன்று பிரிவுகளா ஒரு கூட்டுக்குழுமாக விரிவுபடுத்தப்பட்டது.

  • பிரிவு I - அலுமினியம் சல்பேட் (படிகாரம்),
  • பிரிவு II - வலிநீக்கிகள் & காய்ச்சலடக்கிகள், இருமல் அடக்கி, என்சைம்கள் மற்றும் ஹிபாடோபிலரி பிரபரேசன், நீர்ப்பெருக்கிகள், தொற்றுக்கெதிரான மேற்பூச்சுகள் மற்றும் பூசண எதிர்ப்பிகள், ஸ்டெராய்டல்லாத அழற்சி மருந்துகள், தசை தளர்த்திகள், நுண்ணுயிர் கொல்லிகள் மற்றும் ஆண்டிபாக்டீரியல்களும், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள், வாய்வழி மின்பகுபொருள்கள் போன்ற மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள்.
  • பிரிவு III - அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான, காந்தர்டைன் கூந்தல் தைலம், திரவ கிருமிநாசினி (விளக்கு பிராண்ட்), விட்டில்பூச்சி விலக்கி (இரசகற்பூர உருண்டைகள்), தரை தூய்மையாக்கிகள் (வெள்ளை புலி), கழிவறை தூய்மையாக்கி (கிளீன் டாய்லெட்).

தற்போதைய நிலை[தொகு]

நட்டத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம் அண்மைக்காலமாக மீண்டு வந்துள்ளது. 2015-16 ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனத் தயாரிப்பு விற்பனை 5 மடங்கு அதிகரித்து ரூ. 88 கோடியைத் தொட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை லாபம் ஈட்டும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரய்யா தெரிவித்துள்ளார். இதனால் சிறந்த நிதி நிர்வாகம் காரணமாக விரைவிலேயே லாபப் பாதைக்கு நிறுவனம் திரும்பும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. [5]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Bengal Chemicals & Pharmaceuticals Ltd". bengalchemicals.gov.in. Archived from the original on 7 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Bengal Chemicals and Pharmaceuticals Ltd". business.highbeam.com. Archived from the original on 7 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Acharya Prafulla Chandra Ray was succeeded by Tulsi Ray an eminent Solicitor of the Hon'ble High Court at Calcutta. He remained the Chairman and Managing Director of the Company till 1963. 19.html "Pharmaceutical Industry". indianmirror.com. பார்க்கப்பட்ட நாள் 7 March 2014. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Chemistry of nationalism". telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 7 March 2014.
  5. "இந்த நோய்க்கு மருந்து எங்கிருக்கிறது?". கட்டுரை. தி இந்து. 30 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2017.