வங்காளதேசத்தில் கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்கதேசத்தில் கருக்கலைப்பு (Abortion in Bangladesh) பெரும்பாலான சூழ்நிலைகளில் சட்டவிரோதமானது. ஆனால் மாதவிடாய் கட்டுப்பாடு பெரும்பாலும் மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. வங்காளதேசம் இன்னும் 1860ஆம் ஆண்டிலிருந்து தண்டனைச் சட்டத்தால் இதை நிர்வகிக்கிறது. அங்கு பெண் ஆபத்தில் இருந்தால் தவிர தூண்டப்பட்ட கருக்கலைப்பு சட்டவிரோதமானதாகும்.[1]

வரலாற்று ரீதியாக, குறிப்பாக வங்காளதேச விடுதலைப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கருக்கலைப்பு பரவலாக இருந்துள்ளது. உதாரணமாக, 1972இல், போரின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதித்தது. 1976ஆம் ஆண்டில், வங்காளதேச தேசிய மக்கள் தொகை கொள்கை முதல் மூன்று மாத கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க முயன்றது. [2]

1979 முதல், மாதவிடாய் கட்டுப்பாடு தூண்டப்பட்ட கருக்கலைப்புக்கு மாற்றாக இருந்தது. மேலும் கருவுறுதலை நிறுவ முடியாததால் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. [2] 2012ஆம் ஆண்டில், வங்காளதேசத்திற்கான மருந்து நிர்வாகம் மருத்துவ கருக்கலைப்புக்கான மைஃபெப்ரிஸ்டோன், மிசோப்ரோடால் ஆகியவற்றின் கலவையை சட்டப்பூர்வமாக்கியது.[3]

மாதவிடாய் கட்டுப்பாடு[தொகு]

1979 முதல் வங்காளதேசத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக, மாதவிடாய் கட்டுப்பாடு என்பது ஒரு மாதவிடாய் தவறவிட்ட பிறகு கருவுறாமல் இருக்கச் செய்ய கைமுறையைப் பயன்படுத்துகிறது.[1] இது எளிதானது. மேலும், மலிவான உபகரணங்கள் மூலம் செய்ய முடியும். மயக்க மருந்து பயன்படுத்தாமல் இந்த செயல்முறை செய்யப்படுகிறது.[4]

2013ஆம் ஆண்டில் மாதவிடாய் ஒழுங்குமுறை பற்றிய ஒரு ஆய்வு, வங்காளதேசத்திலுள்ள 10 வெவ்வேறு வசதிகளைச் சேர்ந்த 651 பெண்களை ஆய்வு செய்தது. அவர்கள் மாதவிடாய் ஒழுங்குமுறையை நாடினர். மேலும், அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் சுமார் 63 நாட்கள் அல்லது குறைவாக தாமதமாக இருந்தனர். அவர்களுக்கு சுமார் 200 மி.கி மைபெப்ரிஸ்டோன் வழங்கப்பட்டது, பின்னர் 800 மி.கி மிசோப்ரோஸ்டால் வழங்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் 93% பெண்கள் அறுவை சிகிச்சை தலையீட்டைப் பயன்படுத்தாமல் கருப்பையை வெளியேற்றியுள்ளனர்.மேலும், 92% பெண்கள் மாத்திரைகளிலும், மீதமுள்ள சிகிச்சையிலும் திருப்தி அடைந்தனர்.[5] மாதவிடாய் கட்டுப்பாட்டு மையங்கள் மையப்படுத்தப்பட்டவை. மேலும், இலவசம் என்றாலும், பல பெண்களுக்கு சமூக பொருளாதார தடைகளாலும், சமூக இழிவு காரணமாகவும் அணுகவதில்லை.[5] கர்ப்பம் 10 வாரங்களுக்கு மேல் இருந்தால் மையங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. மேலும் பல பெண்களுக்கு மாதவிடாய் கட்டுப்பாடு பற்றியே தெரியாது அல்லது இந்தச் செயல்முறைக்கு ஆண்களின் எதிர்ப்பை எதிர்கொள்வர். இதன் விளைவாக, சில பெண்கள் சட்டவிரோத கருக்கலைப்புக்கு திரும்புகிறார்கள்.

கருக்கலைப்பு[தொகு]

தாயின் உயிரைக் காப்பாற்றுவது அவசியமானால், ஒரு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கருக்கலைப்பை சட்டப்படி செய்ய முடியும். சுய கருக்கலைப்பு செய்யும் பெண் உட்பட வேறு எந்த சூழ்நிலையிலும் கருக்கலைப்பு செய்யும் நபருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மாதவிடாய் கட்டுப்பாடு ஒரு பெண்ணை தனது கடைசி மாதவிடாயிலிருந்து 10 வாரங்களுக்குள் நிறுத்த அனுமதிக்கிறது. ஆனால் கருவுறுதலை நிறுத்த பாதுகாப்பற்ற முறைகள் பரவலாக உள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பெண்களுக்கு மாதவிடாய் கட்டுப்பாடு உள்ளிட்ட கருவுறுதல் கட்டுப்பாடு பற்றிய தகவல்களைப் பெற ஒரு இலவச தொலைபேசி சேவை உருவாக்கப்பட்டது.[6]

ஆய்வு[தொகு]

மாட்லாப் என்ற கிராமப்புற மாவட்டத்தை ஆய்வு செய்த குட்மேச்சர் நிறுவனத்தின் ஒரு கட்டுரையின் படி, கருவுறுதல் கட்டுப்பாட்டுக்கான பாதுகாப்பான முறைகள் இருந்தபோதிலும் சட்டவிரோத கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது.[7]

மிசானூர் ரகுமான், ஜூலி தாவன்சோ ஆகியோரின் ஆய்வில் 2000க்கும் 2008 க்குமிடையில், ஒரு பெண் பிரசவத்தை விட பாதுகாப்பற்ற கருக்கலைப்பு சிக்கல்களால் இறக்க வாய்ப்புள்ளது என்கிறது. மேலும், பிரசவத்திலிருந்து இறப்பு விகிதங்கள் மாதவிடாய் ஒழுங்குமுறையின் சிக்கல்களுக்கான இறப்பு விகிதங்களைப் போலவே இருந்தன. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Fact Sheet: Menstrual Regulation and Induced Abortion in Bangladesh". Guttmacher Institute. September 2012. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  2. 2.0 2.1 "Country Profile – Bangladesh". Asia Safe Abortion Partnership. Archived from the original on 11 November 2016. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  3. Zaidi, Shahida; Begum, Ferdousi; Tank, Jaydeep; Chaudhury, Pushpa; Yasmin, Haleema; Dissanayake, Mangala (2014). "Achievements of the FIGO Initiative for the Prevention of Unsafe Abortion and its Consequences in South-Southeast Asia". International Journal of Gynecology & Obstetrics 126: S20–S23. doi:10.1016/j.ijgo.2014.03.015. பப்மெட்:24743025. 
  4. Laufe, Leonard E. (October 1977). "The Menstrual Regulation Procedure". Studies in Family Planning 8 (10): 253–256. doi:10.2307/1966015. 
  5. 5.0 5.1 Alam, Anadil; Bracken, Hillary; Johnson, Heidi Bart; Raghavan, Sheila; Islam, Noushin; Winikoff, Beverly; Reichenbach, Laura (June 2013). "Acceptability and Feasibility of Mifepristone-Misoprostol For Menstrual Regulation in Bangladesh". International Perspectives on Sexual and Reproductive Health 39 (2): 79–87. doi:10.1363/3907913. பப்மெட்:23895884. 
  6. (23 October 2013). "Safe Abortion Hotline Launched for Menstrual Regulation in Bangladesh". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2014-10-24 at the வந்தவழி இயந்திரம்
  7. "In Bangladesh, Unsafe Abortion is Common Despite Availability of Safer Pregnancy Termination Procedure". செய்திக் குறிப்பு.
  8. DaVanzo, Julie; Rahman, Mizanur (September 2014). "Pregnancy Termination in Matlab, Bangladesh: Trends And Correlates of Use of Safer and Less-Safe Method s". International Perspectives on Sexual and Reproductive Health 40 (3): 119–126. doi:10.1363/4011914. பப்மெட்:25271647.