லோங்யுவான் பவர்
Jump to navigation
Jump to search
வகை | சீன அரசு ஆலை |
---|---|
நிறுவுகை | 1993 |
தலைமையகம் | ![]() |
சேவை வழங்கும் பகுதி | மக்கள் சீனக் குடியரசு |
முக்கிய நபர்கள் | சு யங்பான் |
தொழில்துறை | காற்றுத் திறன் |
தாய் நிறுவனம் | சைனா கோடியன் கூட்டுத்தாபனம் |
இணையத்தளம் | சீன லோங்யுவான் பவர் குரூப் லிமிட்டெட் |
சீனா லோங்யுவான் பவர் குரூப் லிமிட்டெட் அல்லது லோங்யுவான் பவர் என்று அழைக்கப்படும் நிறுவனம் சீனா, மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய காற்றுத் திறன் தயாரிக்கும் நிறுவனமாகும்.[1]. இந்த நிறுவனம் பிரதானமாக காற்றாலைகளை வடிவமைத்தல், தயாரித்தல், மேலாண்மை செய்தல் மற்றும் இயக்குதல், போன்ற பணிகளுடன் காற்றாலைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் உபயோகிப்பாளர்களுக்கு விற்பனையும் செய்கின்றது[2].
லோங்யுவான் பவர் சீன அரசிற்குச் சொந்தமான சைனா கோடியன் கூட்டுத்தாபனத்தின் மானியத்தைப் பெற்றுக்கொள்கின்றது. 2008 இன் முடிவில் இந்த நிறுவனம் சீனாவின் காற்றாலை சக்தியாக்கத்தில் 24 சதவீதத்தை தன்வசம் வைத்திருந்தது. இந்த நிறுவனம் ஹாங்காங் பங்குச் சந்தையில் டிசம்பர் 2009 முதல் ஒரு பங்கு HK$8.16 என பட்டியலிடப்பட்டது[3].
ஆதாரம்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- சீனா லோங்யுவான் பவர் குரூப் லிட். - (ஆங்கில மொழியில்)