லேன்செட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி லேன்செட்  
சுருக்கமான பெயர்(கள்) லேன்செட்
துறை மருத்துவம்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: ரிச்சார்ட் ஹர்ட்டன் (ஆசிரியர்)
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் எல்செவியர்
வரலாறு 1823–முதல்
வெளியீட்டு இடைவெளி: வாரந்திர இதல்
Open access Delayed
தாக்க காரணி 53.254 (2017)
குறியிடல்
ISSN 0140-6736 (அச்சு)
1474-547X (இணையம்)
LCCN sf82002015
CODEN LANCAO
OCLC 01755507
இணைப்புகள்

லேன்செட் என்பது வாராந்திர பொது மருத்துவ இதழாகும். இது உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்ததாக அறியப்பட்ட பொது மருத்துவ இதழ்களில் ஒன்றாக உள்ளது.[1]

இந்த இதழ் 1823 ஆம் ஆண்டில் தாமஸ் வாக்லே என்ற ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரால் நிறுவப்பட்டது, அவரது அறுவைசிகிச்சை கருவியின் நியாபகார்த்தமாக லான்சட் என்று பெயரிடப்பட்டது, அத்துடன் கட்டிடக்கலை பதமான "லேன்செட் வளைவு" [2],"ஞானத்தின் ஒளி" அல்லது "வெளிச்சத்தினை உள்ளே அனுமதிக்கும்" ஒரு கூர்மையான வளைவு கொண்ட சாளரம் என்ற பொருள் தரும் வகையிலும் பெயரிடப்பட்டது.

இந்த பத்திரிகை ஆராய்ச்சி கட்டுரைகள், மதிப்பாய்வு கட்டுரைகள் ("கருத்தரங்குகள்" மற்றும் "விமர்சனங்கள்"), தலையங்கங்கள், புத்தக மதிப்புரைகள், கடிதங்கள், அத்துடன் செய்தி அம்சங்கள் மற்றும் நிலை அறிக்கைகள் ஆகியவற்றை வெளியிடுகிறது. 1991 ஆம் ஆண்டு லான்செட் பத்திரிக்கை எல்செவியர்-ஆல் வாங்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு முதல், ரிச்சார்ட் ஹர்ட்டன் என்பவர் அதன் ஆசிரியரானார்.[3] இந்த இதழுக்கு லண்டன், நியூயார்க், மற்றும் பெய்ஜிங் ஆகியவற்றில் அலுவலகங்கள் உள்ளன.

சரிவிகித உணவு[தொகு]

ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் தேவைப்படும் கலோரிக்கு தக்க எவ்வளவு உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என உலகம் முழுவதுமிருந்து 16நாடுகளைச் சார்ந்த 37நிபுணர்கள் குழு இணைந்து ஒரு அறிக்கையை லேன்செட் இதழில் வெளியிட்டது.[4][5]

சான்றுகள்[தொகு]

  1. "Prestigious Medical Journal, The Lancet, Issues Family Planning Series". Population Media Center. 13 July 2012. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
  2. "About the Lancet Medical Journal".
  3. "People at The Lancet". The Lancet. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
  4. "சரிவிகித உணவு திலேன்செட்".
  5. "Food in the Anthropocene: the EAT–Lancet Commission".
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேன்செட்&oldid=2750048" இலிருந்து மீள்விக்கப்பட்டது