லெஷ்மேனியாசிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெஷ்மேனியாசிஸ்
Cutaneous leishmaniasis in the hand of a நடு அமெரிக்காn adult
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B55.
ஐ.சி.டி.-9085
நோய்களின் தரவுத்தளம்3266 29171 3266 7070
மெரிசின்பிளசு001386
ஈமெடிசின்emerg/296
பேசியண்ட் ஐ.இலெஷ்மேனியாசிஸ்
ம.பா.தD007896

லெஷ்மேனியாசிஸ் (Leishmaniasis) அல்லது லெஷ்மேனியோசிஸ் என்பது ஒரு நோய்; இது ஏற்படக் காரணம் லெஷ்மேனியா என்ற பேரினத்தைச் சேர்ந்த ஓரணு ஒட்டுண்ணி ஆகும். சில குறிப்பிட்ட வகையான மண் ஈக்கள் கடிப்பதன் மூலம் இது பரவுகிறது.[1] இந்த நோய் சருமத்தில், சளியில் அல்லது உள்ளுறுப்பில் என மூன்று முக்கிய வழிகளில் காணப்படலாம்.[1] சரும வடிவிலானது சருமப் புண்களாகக் காணப்படலாம்; சளி வடிவிலானது சருமம், வாய், மற்றும் மூக்கில் தோன்றும் புண்களாகக் காணப்படலாம்; உள்ளுறுப்பு வடிவிலானது சருமப் புண்களாகத் தொடங்கி பின்னர் காய்ச்சல், குறைந்தளவு சிகப்பு இரத்த அணுக்கள் மற்றும் விரிவடைந்த மண்ணீரல், விரிவடைந்த கல்லீரலாக மாறலாம்.[1][2]

மனிதர்களில் தோன்றும் தொற்றுகள் 20க்கும் மேற்பட்ட லெஷ்மேனியா இனத்தினால் ஏற்படுகிறது.[1] இதற்கான எச்சரிக்கைக் காரணிகளாகப் பின்வருவனவற்றை கூறலாம்: ஏழ்மை, ஊட்டச்சத்து இன்மை, காடுகளை அழித்தல், மற்றும் நகரமயமாக்கல்.[1] மேற்கூறிய மூன்று வகை நோய்களையும் மைக்ரோஸ்கோப் வழியே இந்த ஒட்டுணிகளைக் காண்பதன் மூலம் கண்டறியப்படலாம்.[1] மேலும், உள்ளுறுப்பு நோயானது இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படலாம்.[2]

பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட வலைகளின் கீழ் தூங்குவதன் மூலம் லெஷ்மேனியாசிஸ் ஓரளவு தடுக்கப்படலாம்.[1] மண் ஈக்களைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளை அடித்தல், மற்றும் இந்நோய் மேலும் பரவுவதைத் தடுக்க இந்நோய் கண்டவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தல் போன்றவை வேறு வழிமுறைகளாகும்.[1] இந்நோய் எவ்விடத்திலிருந்து ஏற்பட்டது, "லெஷ்மேனியா"வின் இனம், மற்றும் தொற்றின் வகை ஆகியவற்றைப் பொறுத்து இதற்கான சிகிச்சை நிர்ணயிக்கப்படுகிறது.[1] உள்ளுறுப்பு வகை நோய்க்கான சில சாத்தியமான மருந்துகளாகப் பின்வருவனவற்றை கூறலாம்: (liposomal amphotericin B),[3] (pentavalent antimonials) மற்றும் (paromomycin) ஆகியவற்றின் கலவை,[3] மற்றும் (miltefosine).[4] சரும நோய்க்கு, பரமோமைசின் (paromomycin), (fluconazole), அல்லது (pentamidine) சிறந்ததாக இருக்கலாம்.[5]

தற்போது சுமார் 98 நாடுகளில்[2]சுமார் 12 மில்லியன் மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.[6] ஒவ்வொரு வருடமும், சுமார் 2 மில்லியன் புதிய நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்;[2] 20 முதல் 50 ஆயிரம் மரணங்கள் நிகழ்கின்றன.[1][7] ஆசியா, ஆப்பிரிக்கா, தென் மற்றும் வட அமெரிக்கா, மற்றும் தென் ஐரோப்பாவில் உள்ள சுமார் 200 மில்லியன் மக்கள், இந்நோய் பொதுவாக உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.[2][8] இந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சில மருந்துகளில் உலக சுகாதார நிறுவனம் தள்ளுபடி பெற்றுள்ளது.[2] இந்நோய் நாய்கள் மற்றும் கொறிக்கும் விலங்குகள் உட்பட வேறு பல விலங்குகளிலும் ஏற்படலாம்.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Leishmaniasis Fact sheet N°375". World Health Organization. January 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Barrett, MP; Croft, SL (2012). "Management of trypanosomiasis and leishmaniasis.". British medical bulletin 104: 175–96. doi:10.1093/bmb/lds031. பப்மெட்:23137768. 
  3. 3.0 3.1 Sundar, S; Chakravarty, J (Jan 2013). "Leishmaniasis: an update of current pharmacotherapy.". Expert opinion on pharmacotherapy 14 (1): 53–63. doi:10.1517/14656566.2013.755515. பப்மெட்:23256501. 
  4. Dorlo, TP; Balasegaram, M; Beijnen, JH; de Vries, PJ (Nov 2012). "Miltefosine: a review of its pharmacology and therapeutic efficacy in the treatment of leishmaniasis.". The Journal of antimicrobial chemotherapy 67 (11): 2576–97. doi:10.1093/jac/dks275. பப்மெட்:22833634. 
  5. Minodier, P; Parola, P (May 2007). "Cutaneous leishmaniasistreatment.". Travel medicine and infectious disease 5 (3): 150–8. doi:10.1016/j.tmaid.2006.09.004. பப்மெட்:17448941. 
  6. "Leishmaniasis Magnitude of the problem". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
  7. Lozano, R (Dec 15, 2012). "Global and regional mortality from 235 causes of death for 20 age groups in 1990 and 2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010.". Lancet 380 (9859): 2095–128. doi:10.1016/S0140-6736(12)61728-0. பப்மெட்:23245604. 
  8. Ejazi, SA; Ali, N (Jan 2013). "Developments in diagnosis and treatment of visceral leishmaniasis during the last decade and future prospects.". Expert review of anti-infective therapy 11 (1): 79–98. doi:10.1586/eri.12.148. பப்மெட்:23428104. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஷ்மேனியாசிஸ்&oldid=1936987" இலிருந்து மீள்விக்கப்பட்டது