லெஃப்கடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெஃப்கடா
Λευκάδα
லெஃப்கடா நகரின் தோற்றம்
லெஃப்கடா நகரின் தோற்றம்
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: அயோனியன் தீவுகள்
மண்டல அலகு: லெஃப்கடா
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 22,652
 - பரப்பளவு: 333.6 km2 (129 sq mi)
 - அடர்த்தி: 68 /km2 (176 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
வலைத்தளம்
https://www.lefkadaofficial.com

லெஃப்கடா (Lefkada, கிரேக்கம்: Λευκάδα‎ ) மற்றும் Leucadia, என்பது கிரேக்கத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள அயோனியன் கடலில் உள்ள ஒரு கிரேக்க தீவு ஆகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதியுடன் ஒரு நீண்ட தரைப்பாலம் மற்றும் மிதக்கும் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தீவின் முக்கிய நகரம் மற்றும் நகராட்சியின் தலைமையகம் லெஃப்கடா ஆகும்.[2] இது தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, அக்ஷன் தேசிய வானூர்தி நிலையத்திலிருந்து தானுந்து பயணத்தில் சுமார் 25 நிமிடங்களில் செல்லும் தொலைவில் உள்ளது. இந்த தீவு லெஃப்கடாவின் பிராந்திய அலகு பகுதியாகும்.

நிலவியல்[தொகு]

நாசாவின் வேர்ல்ட் விண்ட் செயற்கைக்கோள் படத்தில் லெஃப்கடா தீவு.

லெஃப்கடா வடக்கிலிருந்து தெற்காக 35 கிலோமீட்டர்கள் (22 மைல்கள்), கிழக்கிலிருந்து மேற்காக 15 கிலோமீட்டர்கள் (9 மைல்கள்) என்ற அளவில் உள்ளது. தீவின் பரப்பளவு சுமார் 302 சதுர கிலோமீட்டர்கள் (117 sq mi), நகராட்சியின் பரப்பளவு (கலாமோஸ், காஸ்டோஸ் தீவுகள் மற்றும் பல சிறிய தீவுகள் உட்பட) 333.58 km2 (128.80 sq mi) ஆகும்.[3] கடல் மட்டத்திலிருந்து 1,158 மீட்டர்கள் (3,799 அடிகள்) உயரம் கொண்ட ஸ்டாவ்ரோட்டா மலை,[4] தீவின் நடுவில் அமைந்துள்ளது. அந்த மலையே தீவின் மிக உயரமான இடமாகும். தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் லிஜியா, நிகியானா மற்றும் பெரிஜியாலி ஆகிய சிறிய உல்லாச விடுதிகள் உள்ளன. தீவின் மிகப்பெரிய உல்லாச விடுதியானது நித்ரிக்கு வடக்கே உள்ளது. இந்த உல்லாச விடுதி ஸ்கார்பியோஸ் (முன்னர் அரிஸ்டாட்டில் ஓனாசிசக்கு சொந்தமானது), மெகானிசி மற்றும் பிற சிறிய தீவுகள் மற்றும் கிரேக்க நிலப்பரப்பு வரையிலான காட்சிகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. லெஃப்கடாவிலிருந்து வாசிலிகி வரையிலான முக்கிய கடற்கரை சாலை கிராமத்தின் வழியாக செல்கிறது, இருப்பினும் ஒரு புறவழிச்சாலை தற்போது முடிக்கப்பட்டுள்ளது. கெஃபலோனியா, இத்தாக்கா மற்றும் மெகானிசிக்கு வழக்கமாக சொகுசு படகு போக்குவரத்து உள்ளது.

நித்ரிக்கு தெற்கே 20 கிலோமீட்டர்கள் (12 மைல்) தொலைவில் விண்ட்சர்ஃபிங் மையமான வாசிலிகியின், சொகுசு விடுதி உள்ளது. வாசிலிகியிலிருந்து கெஃபலோனியா மற்றும் இத்தாக்காவிற்கு படகுகள் உள்ளன. வாசிலிகிக்கு தெற்கே கேப் லெஃப்கடா உள்ளது, அங்கு கிரேக்க பெண் கவிஞர் சாஃபோ 30 மீ உயரமான பாறைகளில் இருந்து குதித்து இறந்தார்.

போர்டோ கட்சிகியின் புகழ்பெற்ற கடற்கரை லெஃப்கடாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. லெஃப்கடா கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது. கொரிந்தியர்கள் கிமு 7 ஆம் நூற்றாண்டில் அதன் ஓரிடத்தில் அகழி தோண்டினார்கள்.[5]

தீவின் தெற்கு முனையானது டுகாடோ முனை என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர் சில நேரங்களில் முழு தீவைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது.

காலநிலை[தொகு]

நகரின் சாலையின் துவக்கத்துக்கு முன்னால் சூரிய உதயம்
கலாமிட்சி கடற்கரை

தீவில் ஒரு பொதுவாக மத்திய தரைக்கடல் காலநிலை நிலவுகிறது: குறிப்பாக மலைகளில் வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலம் நிலவுகிறது.

லாஃப்காடியோ ஹியர்ன் வரலாற்று மையம்[தொகு]

கிரேக்க யப்பானிய எழுத்தாளரும், இத்தீவில் பிறந்தவருமான லாஃப்காடியோ ஹியர்னுக்காக ஐரோப்பாவில் அமைக்கபட்டுள்ள முதல் அருங்காட்சியகம், 2014 சூலை 4 அன்று லெஃப்காடாவில் லாஃப்காடியோ ஹியர்ன் வரலாற்று மையமாக திறக்கப்பட்டது. இதில் அவரது ஆரம்ப கால பதிப்புகள், அரிய புத்தகங்கள் மற்றும் யப்பானிய சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் இங்கு உள்ள ஒளிப்படங்கள், நூல்கள், கண்காட்சி மூலம், லாஃப்காடியோ ஹியர்னின் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அறியலாம்.

நித்ரியின் தோற்றம்

நகராட்சி[தொகு]

தீவில் உள்ள தற்போதைய நகராட்சியான லெஃப்கடா 2011 உள்ளாட்சி சீர்திருத்தத்தினால் பின்வரும் 7 முன்னாள் நகராட்சிகளை இணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது. அந்த முன்னாள் நகராட்சிகள் நகராட்சி அலகுகளாக மாறின:[2]

 • அப்பல்லோனியோய்
 • எலோமெனோஸ்
 • கலாமோஸ்
 • கார்யா
 • கஸ்டோஸ்
 • லெஃப்கடா (நகரம்)
 • ஸ்ஃபாக்கியோட்ஸ்

நகராட்சியானது லெஃப்கடா தீவு மற்றும் சிறிய தீவுகளான காஸ்டோஸ் மற்றும் கலாமோஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கல்வி[தொகு]

லெஃப்கடாவில் உள்ள அயோனியன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான பிராந்திய மேம்பாட்டுத் துறை இங்கு செயல்படுகிறது.[6]

போக்குவரத்து[தொகு]

 • கிரேக்க தேசிய சாலை 42
 • ஆக்ஷன் (ப்ரீவேசா) விமான நிலையம்

குறிப்பிடத்தக நபர்கள்[தொகு]

அரிஸ்டாடெலிஸ் வாலாரிடிஸின் மார்பளவு சிலை

(காலவரிசைப்படி)

 • மார்கோஸ் கிறிஸ்டினோ ஃபியோரவந்தி (1775-1862), பிரேசிலில் சாண்டோ அன்டோனியோ டா பட்ருல்ஹாவின் இணை நிறுவனர்
 • ஃபிரடெரிக் கோயில் (1821-1902), கேன்டர்பரி பேராயர்
 • அரிஸ்டாடெலிஸ் வலோரிடிஸ் (1824-1879), கவிஞர் மற்றும் அரசியல்வாதி
 • லாஃப்காடியோ ஹெர்ன் (1850-1904), கிரேக்க-ஐரிஷ் ஓரியண்டலிஸ்ட் மற்றும் எழுத்தாளர், தீவின் பெயரிடப்பட்டது
 • பெட்ரோஸ் சௌமிலாஸ் (1861-1955), லெப்டினன்ட் ஜெனரல் பதவியை அடைந்த கிரேக்க இராணுவ அதிகாரி.
 • டிமிட்ரியோஸ் கோலெமிஸ் (1874-1941), தடகள வீரர்
 • கிரிகோரியோஸ் கரிடிஸ் (1912-1968), இசைக்கலைஞர், ஓபரா இசையமைப்பாளர் மற்றும் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் பேராசிரியர்
 • அகெலோஸ் சிகெலியானோஸ் (1884-1951), கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர்
 • அரிஸ்டாட்டில் ஓனாசிஸ், (1906-1975), கிரேக்க கப்பல் அதிபர்
 • தியோடோரோஸ் ஸ்டாமோஸ் (1922-1997), கிரேக்க-அமெரிக்க ஓவியர்
 • அப்போஸ்டோலோஸ் காக்லமானிஸ் (1936-), அரசியல்வாதி
 • Evaggelos Vlassopoulos (1935-2002), அரசியல்வாதி
 • ஜார்ஜ் கேடனாஸ் (1938-2004), அரசியல்வாதி
 • ஆக்னஸ் பால்ட்சா (1944-), ஓபரா பாடகர்
 • ஸ்பைரோஸ் உரெட்டோஸ் (1960-), கவிஞர்
 • ஜான் ஜாவிட்சானோஸ் (1962-), அமெரிக்க விசாரணை வழக்கறிஞர்
 • ஸ்பைரோஸ் மரங்கோஸ் (1967-), கால்பந்து வீரர்
 • மெரினா லாம்ப்ரினி டயமண்டிஸ் (1985-), பாடகி மற்றும் பாடலாசிரியர்

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஃப்கடா&oldid=3792250" இருந்து மீள்விக்கப்பட்டது