லுட்விக் பிராண்டில்
Appearance
லுட்விக் பிராண்டில் | |
---|---|
Ludwig Prandtl | |
பிறப்பு | ஃப்ரெய்சிங், ஜெர்மனி | 4 பெப்ரவரி 1875
இறப்பு | 15 ஆகத்து 1953 கோட்டிஞ்சென், ஜெர்மனி | (அகவை 78)
வாழிடம் | ஜெர்மனி |
தேசியம் | ஜெர்மானியர் |
துறை | காற்றியக்கவியல் |
பணியிடங்கள் | கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம் Technical School in Hannover |
கல்வி கற்ற இடங்கள் | Technical University of Munich |
ஆய்வு நெறியாளர் | August Föppl |
முனைவர் பட்ட மாணவர்கள் | Ackeret, Heinrich Blasius, Busemann, Nikuradse, Pohlhausen, Schlichting, Tietjens, Tollmien, von Kármán, and many others (85 in total). |
அறியப்படுவது | எல்லைப்படலம் பிராண்டில் எண் |
லுட்விக் பிராண்டில் (Ludwig Prandtl, பிப்ரவரி 4, 1875 - ஆகத்து 15, 1953) என்பவர் செருமானிய அறிவியலாளராவார். அவர் படிப்படியான கணிதவியற் பகுப்பாய்வு முறைகளில் நிபுணர். அக்கணித முறைகளை காற்றியக்கவியல் சார்ந்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். அவர் உருவாக்கிய கணித மாதிரிகளே வானூர்திப் பொறியியலின் அடிப்படைத் தத்துவங்களாக அறியப்படுகின்றன. 1920-களில் அவர் குறையொலிவேக மற்றும் ஒலியொத்தவேக காற்றியக்கவியலுக்கான அடிப்படையான கணிதவியல் பகுப்பாய்வு முறைகளைக் கண்டறிந்து மேம்படுத்தினார். எல்லைப்படலம், மெல்லிய-காற்றிதழ், மற்றும் ஏற்றுவரிக் கோட்பாடு ஆகியவை அவரது பங்களிப்புகளில் மிக முக்கியமானவை ஆகும். பிராண்டில் எண் என்பது அவரது பெயரால் வழங்கப்பெறும் பரிமாணமற்ற எண்ணாகும். இவரே, நவீன காற்றியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இவரது நூல்கள்
[தொகு]- Paul Peter Ewald, Theodor Pöschl, Ludwig Prandtl; authorized translation by J. Dougall and W.M. Deans The Physics of Solids and Fluids: With Recent Developments Blackie and Son (1930).
- Ludwig Prandtl, Essentials of Fluid Dynamics, Hafner Publications, New York (1952).