இடைப்படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாய்ம ஓட்டத்தின் இடைப்படலம். ஒரு குழாய் அல்லது பரப்பை ஒட்டி பாய்மம் ஓடும் விரைவு மாறும் பொழுது லாமினார் (laminar) ஓட்டமா சீர்குலைவு (turbulent) ஓட்டமா என்பதைக் காட்டும் படம்

இயற்பியலிலும் பாய்ம இயக்கவியலிலும் இடைப்படலம் அல்லது எல்லை அடுக்கு (Boundary layer) என்பது ஒரு பரப்பை (எ.கா, குழாயின் சுவர்) ஒட்டி ஓடும் ஒரு பாய்மம் அப்பரப்பின் மீது உரசி நகரும் பொழுது அதன் ஓட்டத்தின் விரைவு மாறும் ஒரு குறிப்பிட்ட தடிப்பு உள்ள படலப் பகுதியைக் குறிக்கும்.

இங்கு பாய்மத்தின் பாகு நிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புவியின் காற்று மண்டலத்தில், நிலப்பரப்பை ஒட்டியுள்ள வளிமண்டல அடுக்கு நிலப்பரப்புடன் வெப்பம், ஈரப்பதம் மற்றும் உந்தம் ஆகியவற்றை மாற்றிக்கொள்கிறது. விமானத்தின் இறக்கையில் எல்லை அடுக்கு, இறக்கைக்கு மிக அருகில் செல்லும் காற்றோட்டத்தின் அடுக்கு ஆகும். எல்லை அடுக்கு அதனை சுற்றியுள்ள பாகுத்தன்மையற்ற பாய்ம ஓட்டத்தில் தாக்கம் விளைவிக்கிறது. இத்தாக்கம் ரெய்னால்ட்ஸ் எண்ணைப் பொறுத்து அமைகிறது.

வரிச்சீர் எல்லை அடுக்கு பல்வேறு விதங்களில் உள்ளது, அவை மேலோட்டமாக அவற்றின் அமைப்பு மற்றும் உருவாகும் விதங்களின் அடிப்படையில் வகை செய்யப்படுகின்றன.ஒரு பொருள் பாய்மத்தில் அலைவுறும் பொது உருவாகும் மெல்லிய சீர் அடுக்கு ஸ்டோக்ஸ் எல்லை அடுக்குக்கு எடுத்துக்காட்டாகும். சமச்சீர் பாய்ம ஓட்டத்தில் வைக்கப் பட்ட தட்டையான பொருளைச் சுற்றி உருவாகும் அடுக்கு ப்ளேசியஸ் எல்லை அடுக்கு எனப்படும். வெப்ப எல்லை அடுக்கு வெப்ப பரிமாற்றம் நடைபெறும் இடங்களில் இருக்கும். பல்வேறு விதமான எல்லை அடுக்குகள் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் சூழ்நிலையைப் பொறுத்து உண்டாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைப்படலம்&oldid=3299196" இருந்து மீள்விக்கப்பட்டது