உள்ளடக்கத்துக்குச் செல்

லீலா சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லீலா சர்க்கார் (Leela Sarkar) என்பவர் தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சிங்கப்பூர் - இந்திய மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். இவர் 1993-ல் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருதினையும்,[1] 2000-ல் மொழிபெயர்ப்புக்கான கேரள சாகித்திய அகாதமி விருதையும் வென்றார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

லீலா சிங்கப்பூரில் 1934 மே அன்று பிறந்தார்.[2] இவரது தந்தை, மருத்துவர் கே.கே. மேனன், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம், கொடகராவைச் சேர்ந்தவர். இவரது தாயார் கேரளாவின் இரிஞ்ஞாலக்குடா, தொட்டிப்பல் பகுதியைச் சேர்ந்தவர்.[3] இரண்டாம் உலகப் போரின் போது, லீலாவின் குடும்பம் சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பியது.[3] ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, திருச்சூரில் உள்ள தூய மேரிக் கல்லூரி மற்றும் எர்ணாகுளம் மகாராஜாவின் கல்லூரியிலும் பட்டம் பெற்றார்.[4] லீலா வங்காளத்தைச் சேர்ந்த திபேசு சர்க்காரை மணந்தார். இவர் இப்போது மும்பையில் வசித்து வருகிறார். லீலா, தாதரின் வங்க பாஷா பிரச்சார சமிதி நடத்திய பாடத்தில் பெங்காலி மொழியைக் கற்றுக்கொண்டார். இவர் 2004-ல் பெங்காலி-மலையாள அகராதியை வெளியிட்டார்.[1]

பெங்காலி எழுத்தாளர்கள் எழுதிய பல புத்தகங்களை லீலா மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இவர் ஜஹாங்கீர் கலைக்கூடத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். பின்னர், லீலா சி. ஆர். ஒய். சேவைச் சமூகத்தின் மும்பை அலுவலகத்தில் நிர்வாகியாக பணியாற்றினார்.

நூல் பட்டியல்[தொகு]

 • அபயம்
 • அபிமன்யு
 • அசமயம்
 • அம்மா
 • தூரதர்ஷினி
 • மகாமோஹம்
 • இச்சாமதி
 • ஆரண்யகம்
 • என்டே பெண்குட்டிக்கலாம்
 • ஜரன்
 • வம்சவ்ருக்ஷம்
 • ஃபெரா
 • சத்யம், அசத்தியம்
 • கைவர்தகண்டம்
 • ராமபாதசௌதரி
 • பாரதிய சுவர்ண கதைகள் - முன்ஷி பிரேம்சந்த்
 • ஆரண்யத்தின் அதிகாரம்[5]
 • மானஸா வசுதா
 • நிலாபர்வதம்[6]

விருதுகள்[தொகு]

 • 2014-ல் பாரத் பவனின் விவர்க ரத்னம் விருது[7]
 • ஆரண்யத்தின் அதிகாரத்திற்காக 1993-ல் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்புப் பரிசு[1][5]
 • மானசா வசுதாவிற்கு 2000ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதமி விருது[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "ബംഗാളിക്കും മലയാളിക്കുമിടയില്‍ വിവര്‍ത്തനത്തിന്റെ പാലം പണിത് ലീല സര്‍ക്കാര്‍" (in en). www.mathrubhumi.com (Mathrubhumi) இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190430170519/http://www.mathrubhumi.com/tv/ReadMore/12405/leela-sarkar-translator/E. பார்த்த நாள்: 30 April 2019. 
 2. "A life dedicated to translation". The Hindu. 23 August 2017. https://www.thehindu.com/news/cities/kozhikode/a-life-dedicated-to-translation/article19543952.ece. 
 3. 3.0 3.1 എഴുത്തുകാര്‍, മലയാളം. "ലീലാ സര്‍ക്കാര്‍". keralaliterature.com. keralaliterature. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
 4. Writers, ലീലാ സർക്കാർ. "books.puzha.com - Author Details". www.puzha.com. puzha. Archived from the original on 9 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
 5. 5.0 5.1 Web Desk, By. "മഹാശ്വേതയുടെ വിയോഗം: നൊമ്പരം നെഞ്ചിലൊതുക്കി ലീലസര്‍ക്കാര്‍". Asianet News Network Pvt Ltd (Asianet News Network Pvt Ltd). https://www.asianetnews.com/magazine/leela-sarkkar-the-malayalam-translator-of-mahaswetha-devi. பார்த்த நாள்: 30 April 2019. 
 6. "MGU Library catalog › Authority search › Leela Sarkar, Tr. (ലീല സര്‍ക്കാര്‍, വിവ.) (Personal Name)". www.mgucat.mgu.ac.in. MGU. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
 7. "ഭാരത് ഭവൻ വിവർത്തക രത്‌നം പുരസ്‌കാരം ലീലാ സർക്കാരിന്‌". www.mathrubhumi.com. Archived from the original on 2014-12-10. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_சர்க்கார்&oldid=3935103" இலிருந்து மீள்விக்கப்பட்டது