லியோனார்டு யூலர் தொலைநோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லியோனார்டு யூலர் தொலைநோக்கி (Leonhard Euler Telescope) அல்லது சுவிசு யூலர் தொலைநோக்கி (Swiss EULER Telescope) என்பது 1.2 மீட்டர் (3.9 அடி) அளவுள்ள முழுமையான தேசிய தானியங்கி தெறிப்புவகைத் தொலைநோக்கியாகும். இது ஜெனீவா ஆய்வகத்தால் கட்டப்பட்டு இயக்கப்படுகிறது. சிலியில் சான் டியேகோவில் இருந்து வடக்கே 460 கிமீ தொலைவில் உள்ள நோர்ட் சீக்கோ பகுதியில் ஐரோப்பிய தெற்கு வான்காணகத் தளத்தில் 2,375 மீ (7,792 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இத் தொலைநோக்கி 1998 ஏப்ரல் 12 இல் முதன்முதல் இயங்கத்தொடங்கியது. இதற்கு சுவிசு கணித மேதையான லியோனார்டு ஆய்லரின் பெயரிடப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Swiss 1.2-metre Leonhard Euler Telescope". ESO. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.
  2. "EULER". Geneva Obervatory. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.

வெளி இணைப்புகள்[தொகு]