லட்சுமி பார்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தமுரி லட்சுமி பார்வதி
ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1996–1999
முன்னையவர்கலமாடா மோகனா ராவ்
பின்னவர்கலமாடா மோகனா ராவ்
தொகுதிபாதபட்டினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தாசரி லட்சுமி பார்வதி
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி
என். டி. ஆர். தெலுங்கு தேசம் கட்சி (லட்சுமி பார்வதி)
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
என்.டி.ராமா ராவ் (தி. 1993⁠–⁠1996)
வேலைஅரசியல்வாதி, எழுத்தாளர்

தாசரி லட்சுமி பார்வதி (Dasari Lakshmi Parvathi) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் என்.டி.ராமராவின் மனைவி ஆவார். இவர் முன்பு ஹரிகதா கலாட்சேபம் செய்யும் கலைஞரன வீரகாந்தம் வெங்கட்ட சுப்பா ராவ் என்பவரை மணந்தார்.[1][2][3] பின்னர், அவரிடமிருந்து பிரிந்து என். டி. ராமராவ் உடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். லட்சுமி பார்வதி 1993 இல் என். டி. ராமாராவை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். [4]

கல்வி[தொகு]

லட்சுமி பார்வதி ஆந்திராவின் தெலுங்கு பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் கல்வி பயின்றவர். இவர் தனது கல்வியை 2000 ஆம் ஆண்டில் முடித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

என். டி. ஆரை மணந்த பிறகு, தீவிர அரசியலில் இறங்கினார். என்.டி.ராமராவ் மறைந்த உடனேயே, லட்சுமி பார்வதி என். டி. ஆர். தெலுங்கு தேசம் என்ற கட்சியை நிறுவி, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பாதபட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1996 இடைத்தேர்தலில் போட்டியிட்டார். [5] 42 தொகுதி வேட்பாளர்கள் 1996 இல் என். டி. ஆர் கட்சியால் போட்டியிட்டனர். தேர்தலில் மொத்தமாக 3,249,267 வாக்குகளைப் பெற்றபோதும் கட்சி ஒரு தொகுதியையும் வெல்லவில்லை. பின்னர் லட்சுமி பார்வதி இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். தற்போது, இவர் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[6]

  • 1999-ல் ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தலுக்காக சோம்பேட்டா மற்றும் ஏலூர் தொகுதிகளில் இருந்து போட்டியிட்டார். லட்சுமி பார்வதி இரு இடங்களையும் வெல்லவில்லை. இவர் ஏலூருவில் வெறும் 1,500 வாக்குகளைப் பெற்றார்.[7]

பிற்கால வாழ்க்கை[தொகு]

பார்வதி 2021 ஆம் ஆண்டில் வெளியான ராதாகிருஷ்ணா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இது கோயா பொம்மைகளின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் (கோயா பொம்மலு) பற்றியது.[8] [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. AB ANAND (24 April 2018). "NTR Marriage With Lakshmi Parvathi Real Facts By Veeragandham Venkata Subba Rao, EX Huasband" – via YouTube.
  2. V6 News Telugu (3 November 2016). "Lakshmi Parvathi About Her First Marriage - Kirrak Show - V6 News" – via YouTube.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. "In NTR's backyard - The Times of India". The Times Of India. http://timesofindia.indiatimes.com/home/stoi/In-NTRs-backyard/articleshow/2000062697.cms?. 
  4. "Telugu celebrities who married more than once". The Times of India.
  5. "Rediff On The NeT: The Rediff Election Interview/ Lakshmi Parvathi". www.rediff.com.
  6. "NTR statue a ploy to exploit his name: Lakshmi Parvathi". 21 December 2018 – via www.thehindu.com.
  7. https://ceotelangana.nic.in/Archives/StasticalReports/StatRep_AP_1999.pdf
  8. Vyas (24 February 2020). "Lakshmi Parvathi to make her acting debut". www.thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
  9. "'Radhakrishna' connected culturally, says actor Anurag". Telangana Today. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_பார்வதி&oldid=3819258" இலிருந்து மீள்விக்கப்பட்டது