லச்சக்கொட்டைக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லச்சக்கொட்டைக் கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. alba
இருசொற் பெயரீடு
Pisonia alba
Spanoghe
வேறு பெயர்கள்
  • Cordia olitoria Blanco
  • Pisonia inermis Vidal

லச்சக்கொட்டைக் கீரை, லஜ்ஜக் கீரை, நஞ்சுண்டான் கீரை, நச்சுக்கொட்டைக் கீரை (pisonia alba) என்று பலவாறாக தமிழில் அழைக்கப்படுவது[1] ஒரு மரமாகும். இது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து அலங்கார தாவரமாக பிரபலமாக வளர்க்கப்படுகிறது. மர வடிவிலான இந்த செடியானது அதன் அகலமான, மஞ்சள் கலந்த பசுமை நிறத்தில் உள்ள இலைகளால் எளிதில் அடையாளம் காணப்படுகிறது. இது இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் இயற்கையாக வளரும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது.[2]

இந்த மரத்தின் தண்டு மென்மையானதாகவும், பிரகாசமான நிறத்திலும் இருக்கும். இந்த மரம் 10 மீ உயரம் வரை எட்டும். இதன் மெல்லிய இலைகள் வெளிர் பச்சை முதல் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலையானது ஒரு கூர்மையான முனையுடன் அகன்று நீள் வட்ட வடிவில் காணப்படும். இது தொலைவில் இருந்து பார்க்கும்போது வாதுமை இலைகளின் சாயலைக் கொண்டிருக்கும்.[1] இந்தச் செடி அரிதாகவே பூக்கும். ஆண் பூக்கள் வெள்ளை அல்லது பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் 6 மிமீ நீளம் கொண்டவையாக இருக்கும். பெண் பூக்கள் சிறியவையாக இருக்கும். இதன் கனி நீளமானதாக இருக்கும்.

இது ஒரு அலங்கார செடி மட்டுமல்லாமல், இதன் இளம் இலைகளை பச்சையாக சாலட்டில் சேர்க்கவும், கீரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலையின் நடு நரம்பை நீக்கிவிட்டு கீரையாக பயன்படுத்தப்படுகிறது.[1] அசைவ உணவை சமைக்கும்போது அதில் லச்சக் கொட்டை கீரையை சேர்க்கும் வழக்கம் தமிழக கிராமங்களில் உள்ளது.[1] இதன் இலைகளுக்கு மருத்துவ குணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.[1]

பிலிப்பைன்ஸில் இது "மாலுகோ" என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லச்சக்கொட்டைக்_கீரை&oldid=3898420" இலிருந்து மீள்விக்கப்பட்டது