ரோமன் சேரிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்னார்டோனோ மீயின் கைவண்ணத்தில் ரோமன் சேரிட்டி ஓவியம்

ரோமன் சேரிட்டி (Roman Charity, இலத்தீன் Caritas romana; இத்தாலியம் Carità Romana) என்பது ஒரு பெண்ணின் முன்மாதிரிக் கதையாகும். பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்றபெரோ இரகசியமாக அவரின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினார். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது.[1]

வரலாறு[தொகு]

இந்த கதையானது, பண்டைய ரோம வரலாற்று ஆசிரியரான வால்ரியஸ் மாக்சிமஸால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சித்தரிக்கும் ஒரு ஓவியம் பீதாஸ் ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.[2] ரோமானிய தொன்மவியலில் ஜூனோவின் தன் தாய்ப்பாலை வயது முதிர்ந்த எர்க்குலிசுக்கு அளித்ததாக உள்ளது.[3]

ரோமன் சரித்திராசிரியர் வால்ரியஸ் மாக்சிமஸ் பதிவு செய்த ஒரு கதை கிட்டத்தட்ட சிமோன் கதையை ஒத்ததாக உள்ளது. பின்னர் மூத்த பிளினி (23-79), சிறையில் இருந்த ஒருவரது மகள் அங்கு செவிலியாக பணிபுரிந்தது பற்றி விவரித்துள்ளார்.[4] Historians note that Renaissance and Baroque depictions have more incestuous overtones.[4]

பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில், பல ஐரோப்பிய கலைஞர்கள் இந்த காட்சியை சித்தரித்துக் காட்டினர்.[5] மிகவும் சிறப்பாக, பீட்டர் பவுல் ரூபென்ஸ் பல ஓவியங்களை வரைந்தார். பரோக் கலைஞரான கரவாஜியோவின் 1606 படைப்பில் இடம்பெற்றிருந்தன.

கலைஞர்களின் சித்தரிப்புகள்[தொகு]

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்[தொகு]

  1. "Iconographical sources of nursing and nursing gestures in Christian cultures," Darkfiber.com, last visited 29 March 2006
  2. Mary Beagon, The Elder Pliny on the Human Animal: Natural History Book 7 (Oxford University Press, 2005), p. 314 online.
  3. Nancy Thomson de Grummond, Etruscan Myth, Sacred History, and Legend (University of Pennsylvania Museum of Archaeology and Anthropology, 2006), pp. 83–84.
  4. 4.0 4.1 Yalom, Marilyn (April 10, 2013). "Roman Charity", The New York Times. Retrieved November 5, 2014.
  5. J. Paul Getty Museum. Cimon and Pero: "Roman Charity." Jean-Baptiste Greuze., last visited 23 September 2008

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமன்_சேரிட்டி&oldid=3578567" இலிருந்து மீள்விக்கப்பட்டது