ரேவதி கிருட்டிணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரேவதி கிருட்டிணா ( Revathy Krishna) இவர் ஓர் இந்திய வீணைக் கலைஞராவார். [1] இவர் கருநாடக இசை, மெல்லிசை மற்றும் திரைப்பட இசை இரண்டிலும் இவரது திறமை புகழ் பெற்றது. வீணையின் மீதான இவரது தீவிர ஆர்வத்தைக் கண்ட, இவரது தாயார், இவரது காலத்தின் புகழ்பெற்ற வயலின் கலைஞர்களை சிறந்த ஆசிரியர்களாகக் கொண்டு இவருக்கு ஒரு முறையான பயிற்சியை வழங்கினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ரேவதி செல்வகுமார் என்ற பெயரில் பிறந்த ரேவதி கிருட்டிணா, செல்வகுமார் மற்றும் லட்சுமி என்பவரின் மகள் ஆவார். ரேவதியின் சகோதரர் சந்திரன் ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். தற்போது அவர் ஓய்வில் உள்ளார். இசை மேதை தியாகராஜரின் சீடர் வம்சாவளியைச் சேர்ந்த இவர், தியாகராஜரின்ன் புனித சீடரான தில்லைஸ்தானம் ராம ஐயங்காரின்பேத்தியாவார். மதுரையில் உள்ள தெராலி இராமசாமி ஐயங்காரிடமிருந்து வாய்ப்பாட்டில் ஆரம்ப பயிற்சி பெற்ற பிறகு, [2] இவர் தனது 12 வயதில் வீணையை கையில் எடுத்தார். மேலும் இவரது ஆர்வத்தை கண்ட இவரது தாயார் சுந்தரம் ஐயர் என்பவரின் கீழ் பயிற்சி பெற வைத்தார். பின்னர் இவர் கே. பி. சிவானந்தம் மற்றும் சாரதா சிவானந்தம் ஆகியோரின் கீழ் தனது கலையை நன்றாக வடிவமைத்தார். அங்கு இவர் தஞ்சை பாணி இசையில் பயிற்சி பெற்றார். [3]

திரைப்பட இசை[தொகு]

இவர் மேடையிலும் திரைப்படங்களிலும் மற்றும் திரைப்பட பாடல்களிலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். பல ஒலித் தொகுப்புகள் மற்றும் காணொளி பாடல் தொகுப்புகள்லும் இவர் தோன்றியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஏ. ஆர். ரகுமான் போன்றவர்களின் பாடல்களுக்கு வீணையில் இசை வழங்கியிருப்பது இசை ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது. [4]

நிகழ்ச்சிகள்[தொகு]

தமிழ்நாடு, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பி. எஸ். ராம் மோகன் ராவ் பதவியேற்பு நிகழ்ச்சியில் இவர் தனது சிறப்பு இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் முன்னிலையிலும் சிறப்பு இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார்.
2012 சூலை அன்று நடந்த உலக தமிழ் மாநாட்டிலும் இவரது இசை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. [5]
தில்லியைத் தளமாகக் கொண்ட வீணை அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் ஆகியவை 2007 இல் ஏற்பாடு செய்த வீணை நவராத்திரியிலும் இசை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. [6]
திருவையாற்றில் வருடந்தோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனையில் தவறாமல் தனது வீணை இசை நிகழ்ச்சியினை நிகழ்த்துகிறார். [7]
இலங்கை, யாழ்ப்பாணத்தில் நெல்லியடி மத்திய கல்லூரியில் ரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. [8]
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தின் நிறைவு நாளுக்கான இசை நிகழ்ச்சியில் வீணை இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார்.
ஆசிய பசிபிக் கலாச்சார விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டார். மேலும் அதில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த நிகழ்வு ஜப்பானிய நகரமான புகுயோகாவில் நடைபெற்றது, மேலும் இது நமது தேசத்தின் பெருமையாக இருப்பது இவருக்கு ஒரு பெரிய மரியாதையாகும்.

விருதுகள் மற்றும் சாதனைகள்[தொகு]

வீணையில் இவரது சிறப்புமிக்க பங்களிப்பிற்காக இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2008 இல் குமார கந்தர்வ விருது வழங்கப்பட்டது. [9]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவதி_கிருட்டிணா&oldid=2917065" இருந்து மீள்விக்கப்பட்டது