ரேச்சல் மேகன் மெர்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேகன் மெர்கல்
Meghan Markle 3441.jpg
சனவரி 2013இல் சூட்சு மேலுயர்த்து நிகழ்வில் மெர்கல்
பிறப்புரேச்சல் மேகன் மெர்கல்
ஆகத்து 4, 1981 (1981-08-04) (அகவை 40)
லாசு ஏஞ்செலசு, கலிபோர்னியா, ஐ.அ.
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்வடமேற்கு பல்கலைக்கழகம்
பணிநடிகை, விளம்பரத் தோற்றவியலாளர், மனிதநேயர்
செயற்பாட்டுக்
காலம்
2002–2017
துணைவர்இளவரசர் ஹாரி (மே 19,2018)
வாழ்க்கைத்
துணை
திரெவர் எங்கெல்சன்
(தி. 2011; ம.மு. 2013)
கையொப்பம்

'

ரேச்சல் மேகன் மெர்கல் (Rachel Meghan Markle, ஆகத்து 4, 1981), பரவலாக மேகன் மெர்கல், அமெரிக்க நடிகையும், விளம்பரக் காட்சியாளராகவும் மனித நேயமிக்கவரும் ஆவார். 2011இலிருந்து அமெரிக்க தொலைக்காட்சி சட்டம் சார் நாடகத்தொடர் சூட்சில் ரேச்சேல் சேன் பாத்திரத்தில் நடித்துள்ளார். பாக்சு ஒளிபரப்புத் தாபனத்தின் அறிவியல் புனைவு-நாடகத்தொடர் பிரிஞ்சில் அமி செசப்பாக நடித்தார்.

மெர்கல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிறந்தவர். இங்குள்ள வியூ பார்க்-வின்ட்சர் இல்சு, ஹாலிவுட் பகுதிகளில் வளர்ந்தார். ரேச்சலின் தந்தை ஒல்லாந்து மற்றும் ஐரிய பின்னணி கொண்டவர். தாயார் ஆபிரிக்க அமெரிக்கர். தயாரிப்பாளர் திரெவர் எங்கெல்சன்னைத் திருமணம் செய்து 2011 முதல் 2013 வரை அவருடன் வாழ்ந்தவர்.

மெர்கல் வேல்சு இளவரசர் ஹாரியை சூன் 2016 முதல் காதலித்து வருகிறார். நவம்பர் 2017இல் இருவரது திருமணம் உறுதியாயிற்று.[1] இவ்விணையரின் திருமணம் மே 19, 2018இல் வின்ட்சர் கோட்டையில் நடைபெற்றது.[2] இத்திருமணத்தை அடுத்து இவர் "ஹர் இரோயல் ஹைனஸ் தி டச்சஸ் ஆஃப் சசக்சு" (அரசதகு சசக்சு இளவரசி) என அழைக்கப்படுகிறார் .

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]