திருமணம் (கத்தோலிக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருமணமுறை பற்றியது. இதர பயன்பாடுகளுக்கு திருமணம்

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான வாழ்நாள் ஒப்பந்தம்.[சான்று தேவை] இவ்வொப்பந்தம் தம்பதியர்களில் ஒருவர் இறக்கும்வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது.[சான்று தேவை]

திருமண வாக்குறுதி[தொகு]

இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் தம்பதியர்கள் கடவுளின் முன்னிலையிலும், திருச்சபை முன்னிலையிலும் வாக்களிக்கின்றனர். மேலும் எவ்வித வற்புறுத்தலுமின்றி, முழு மனதுடன் இவ்வாக்குறுதி அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

கத்தோலிக்க திருமணம்

திருமணத்தின் புனிதம்[தொகு]

திருமணம் கடவுளால் நிச்சியக்கப்படுகிறது. இதை குறித்து மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தியில் 10-வது அதிகாரம் 6 முதல் 9 வரை உள்ள வசனங்களில் இயேசு கூறுதாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்தை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

சீராக்கின் ஞானநூலில் 26 அதிகாரம் 3ம் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

நல்ல மனைவியே ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்வருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள்.

மணதம்பதியர்கள்[தொகு]

மணதம்பதியர்கள் இருவரும் திருமுழுக்க பெற்ற கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும். எதிர்பாலினராக இருக்க வேண்டும். [1]

கடமைகள்[தொகு]

தம் பிள்ளைகளை நல்வழியில் வளர்க்க தம்பதியர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

திருமணம்
திருமணமும் கத்தோலிக்கமும்

திருமண ஒப்பந்தம்

  1. http://www.vatican.va/archive/ccc_css/archive/catechism/p2s2c3a7.htm