ரெட்டி ராவ்
ரெட்டி ராவ் | |
---|---|
திருவிதாங்கூரின் திவான் | |
பதவியில் 1817 செப்டம்பர் – 1821 | |
ஆட்சியாளர் | சுவாதித் திருநாள் ராம வர்மா |
முன்னையவர் | இராமன் மேனன் |
பின்னவர் | ஆர். வெங்கட ராவ் |
பதவியில் 1843–1845 | |
ஆட்சியாளர் | சுவாதித் திருநாள் ராம வர்மா |
முன்னையவர் | கிருட்டிணா ராவ்சீனிவாச் |
பின்னவர் | சீனிவாச ராவ் |
ரெட்டி ராவ் (Reddy Rao), வெங்கட்ட ராவ் என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய நிர்வாகியாவார். இவர் திருவிதாங்கூர் திவானாக 1817 முதல் 1821 வரை மற்றும் 1843 முதல் 1845 வரை பணியாற்றியவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ரெட்டி ராவ் கும்பகோணத்தில் ஒரு தஞ்சாவூர் மராத்தி தேசஸ்த் குடும்பத்தில் பிறந்தார். ஜான் மன்ரோ 1811 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் திவானானபோது, ரெட்டி திருவிதாங்கூர் சேவையில் கணக்காளராக சேர்ந்தார. மேலும் ராஜ்யத்தின் கணக்குத் துறையை மறுசீரமைக்க உதவினார். [1]
திருவிதாங்கூரின் திவான்
[தொகு]ரெட்டி ராவ் செப்டம்பர் 1817 இல் திருவிதாங்கூர் திவான் ஆனார். இவர் ஜான் மன்ரோவின் பாதுகாவலராக இருந்து, சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அவரது சார்பாக பணியாற்றினார். [2] பொறுப்பேற்ற உடனேயே, ரெட்டி கிறிஸ்தவர்களை இந்து விழாக்களுக்கு கட்டாய நன்கொடைகளிலிருந்து விடுவித்தும், ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கும் அரச பிரகடனங்களை நிறைவேற்றினார். தாழ்த்தப்பட்ட சாதி இந்துக்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நகைகளை அணிவதிலிருந்த தடையை நீக்கியும், காபி சாகுபடி மற்றும் தடுப்பூசியையும் அறிமுகப்படுத்தினார். 1820 இல் இளவரசி ருக்மிணி பாயின் திருமணம் நடந்தபோது, ரெட்டி ராவ் திருமணத்திற்கு ஆடம்பராமன ஏற்பாடுகளைச் செய்தார். அதற்கு பதிலாக ராணியால் செங்கோட்டை வட்டத்தில் சாம்பூர் மற்றும் வடக்கார் ஆகிய கிராமங்களின் வரி வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டன. இதில் திருவிதாங்கூர் அரசருக்கெதிரான் ஊழல் ஏற்பட்டதும், வெங்கட ராவ் என்பவர் திவான் குறித்து புதிய அரசப் பிரதிநிதியான நேவாலிடம் புகார் அளித்தார். இதன் மூலம் இவர் திவான் பதயிவிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
1843 ஆம் ஆண்டில் திவானாக இருந்த சுப்பா ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தபோது, அவருக்கு பின் கிருட்டிணா ராவ் என்பவர் பொறுப்பு திவானாக நியமிக்கப்பட்டார். அவருக்கு திருவாங்கூரில் வசிக்கும் பிரிட்டிசு அரசப் பிரதிநிதியின் ஆதரவு இருந்தது. ஆனால் மகாராஜா அவரிடம் திருப்தி அடையாததால், கிருட்டிணா ராவ் குறித்த தனது கருத்தை சென்னை ஆளுநரிடம் தெரிவித்தார், அவர் ரெட்டி ராவை திவானாக மீண்டும் நியமிக்க அறிவுறுத்தினார். [3]
ரெட்டி ராவ் தனது இரண்டாவது பதவியை திவானாக 1843 முதல் 1845 வரை பணியாற்றினார். இந்த காலம் மகாராஜாவிற்கும் அரசப் பிரதிநிதிக்கும் இடையில் அதிகரிக்கும் கசப்பால் வகைப்படுத்தப்பட்டது. 1845 ஆம் ஆண்டில், தளபதி கல்லன் திவானின் வீழ்ச்சியை லஞ்சம் மற்றும் பரிசுகளைப் பெற்றதாக குற்றம் சாட்டியதன் மூலம் வடிவமைத்தார். [4] திவானின் நடத்தை குறித்து விசாரணை தொடங்கப்பட்டது, இவர் மீண்டும் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- V. Nagam Aiya. Travancore State Manual, Volume I.