ரீட்டா தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீட்டா தேவ்
பிறப்புஅசாம்
இசை வடிவங்கள்இந்தியப் பாரம்பரிய இசை, இந்துஸ்தானி இசை, சங்கீத நாடகம், பஜனைகள், தும்ரி, தாப்பா
தொழில்(கள்)பாரம்பரிய இசைப்பாடகர்
இணையதளம்https://ritadev.com/index.html

ரீட்டா தேவ் (Rita Dev) ஒரு இந்துஸ்தானி பாரம்பரிய பாடகி ஆவார்.[1] இவர் தும்ரி பாடகர் பத்ம விபூசண் விதூஷி கிரிஜா தேவியின் சீடர் ஆவார்.[2] தேவ் அசாம் மாநிலத்தில் பிறந்தார்.[3]

இளமையும் கல்வியும்[தொகு]

குரு நிர்மல் ஆச்சார்யாவின் வழிகாட்டுதலின் கீழ் தேவ் தனது ஆரம்பக் கல்வியை மேல்நாட்டுச் செந்நெறி இசையில் இளமையிலேயே முடித்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பிற்குப் பிறகு, குவாலியர் கரானாவின் பேராசிரியர் சித்தரஞ்சன் ஜோதிஷியின் வழிகாட்டுதலின் கீழ் மேல்நாட்டுச் செந்நெறி இசையில் முனைவர் பட்டம் பெற்றார். பனாரசு கரானாவின் பழம்பெரும் பாடகர் மகாதேவ் பிரசாத் மிசுராவின் கீழ் இலகுவான பாரம்பரிய இசையைக் கற்கும் பொன்னான வாய்ப்பையும் இவர் பெற்றார்.[4]

தொழில்[தொகு]

தேவ் ஆக்ரா, ஆக்ரா கல்லூரியில் இசைத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார்.

விருதுகள்[தொகு]

பண்டிதர் ஓம்கர்நாத் தாக்கூர் விருது, ஸ்வர ரத்னா, சங்கீத ரத்னா விருது உட்படப் பல மதிப்புமிக்க விருதுகளையும் கௌரவங்களையும் தேவ் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "रीता देव के ठुमरी गीतों से सजी शाम, जमकर झूमे श्रोता / रीता देव के ठुमरी गीतों से सजी शाम, जमकर झूमे श्रोता". Bhaskar. https://www.bhaskar.com/news/latest-sarni-news-050030-2342176.html. 
  2. "प्रकृति से लेकर स्त्री-पुरुष तक के जीवन की वेदना हर लेता है सावन का संगीत". Amar Ujala. https://www.amarujala.com/uttar-pradesh/varanasi/banarasi-singer-rita-dev-talks-about-sawan-music. 
  3. "Book Dr. Rita Dev for event | Request Dr. Rita Dev for performance | Learn Hindustani Classical Vocal, Kathak, Tabla, Light Vocal, Flute, Harmonium, Sitar, Modern dance forms, Bharatnatyam".
  4. "A concert brings Pandit Prabhakar Karekar, Purbayan Chatterjee and Dr Rita Dev together". https://timesofindia.indiatimes.com/entertainment/events/mumbai/a-concert-brings-pandit-prabhakar-karekar-purbayan-chatterjee-and-dr-rita-dev-together/articleshow/66411036.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_தேவ்&oldid=3912831" இலிருந்து மீள்விக்கப்பட்டது