ரிமி டோமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிமி டோமி
Rimi Tomy
பிறப்புசெப்டம்பர் 22, 1983 (1983-09-22) (அகவை 40)
பாலா, கோட்டயம் மாவட்டம், கேரளம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போதும்
வாழ்க்கைத்
துணை
ராய்சு கிழாகூடன்
(தி. 2008; ம.மு. 2019)
[1]
உறவினர்கள்முக்தா (அண்ணி)

ரிமி டோமி (Rimi Tomy, மலையாளம்: റിമി ടോമി, பிறப்பு: 22 செப்டம்பர் 1983) என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகியும், கர்நாடக இசைக்கலைஞரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், அவ்வப்போது நடிக்கும் நடிகையும் ஆவார். இவர் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு மீசா மாதவன் திரைப்படத்தில் சங்கர் மகாதேவனுடன் தனது முதல் பாடலான "சிங்ஙமாசம் வந்னு சேர்ந்நால்" என்ற மலையாள பாடலைப் பாடினார்.[2]

இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், பல்வேறு உண்மைநிலை நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். [3] [4] இவர் ஆசிக் அபு இயக்கிய 5 சுந்தரிகள் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு வெளியான திங்கள் முதல் வெள்ளி வாரே திரைப்படத்தில் ஜெயராமுக்கு சோடியாக தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் பல்ராம் விஎசு தாரதாசு, காரியசுதன் மற்றும் 916 போன்ற திரைப்படங்களின் பாடல் காட்சிகளிலும் தோன்றியுள்ளார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

இவர் டோமி ஜோசபுக்கும் ராணி டோமிக்கும் கோட்டயம் மாவட்டத்திலுள்ள பாலாவில் சிரிய-மலபார் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.[சான்று தேவை] இவருக்கு ரீனு டோமி என்ற ஒரு சகோதரியும், ரிங்கு டோமி என்ற ஒரு சகோதரரும் உள்ளனர். இவரது தந்தை மாரடைப்பு காரணமாக 6 சூலை 2014 அன்று இறந்தார்.

27 ஏப்ரல் 2008 அன்று திருச்சூரிலுள்ள லூர்து கதீட்ரல் தேவாலயத்தில் ராய்சு கிழாகூடன் என்பவரை மணந்தார். 2019 இல் இவர்கள் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். [5] இவரது சகோதரர் ரிங்கு டோமி நடிகை முக்தாவை மணந்தார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Royce gets engaged to Sonia after divorce from Rimi Tomy". மலையாள மனோரமா. 22 February 2020.
  2. "Talking heads". தி இந்து. 9 June 2003 இம் மூலத்தில் இருந்து 19 August 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030819104557/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/06/09/stories/2003060901590300.htm. 
  3. Athira M. (11 April 2013). "Out to have fun". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.
  4. George (24 January 2013). "Quick Five: Suresh Damodaran — Musically inclined". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/radio-and-tv/quick-five-suresh-damodaran-musically-inclined/article4340331.ece/. 
  5. Shevlin Sebastian (2 April 2012). "'Rimi is a spontaneous person'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.
  6. "Muktha Ties Knot with Rinku Tomy".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரிமி டாமி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிமி_டோமி&oldid=3885539" இலிருந்து மீள்விக்கப்பட்டது