ரிச்சார்ட் பிலிப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சார்ட் பிலிப்ஸ்
பராக் ஒபாமாவுடன் 2009இல் வெள்ளை மாளிகையில் உரையாடும் ரிச்சார்ட் பிலிப்ஸ்.[1]
பிறப்புமே 16, 1955 (1955-05-16) (அகவை 68)
வின்செஸ்டர், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணிஎழுத்தாளர், மாலுமி

ரிச்சார்ட் பிலிப்ஸ் ஒரு வியாபாரப் பொருட்களை ஏற்றிச்செல்லும் சர்வதேசக் கப்பலில் பணியாற்றும் கப்டன் தரத்திலான ஒரு மாலுமியாவார். இவர் கப்டன் பொறுப்பேற்று வழி நடத்திச் சென்ற மேயர்ஸ்க் அலபாமா எனும் கப்பல் 2009 இல் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தபட்ட நிகழ்வு மூலம் உலகப் புகழ் பெற்றார். சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கப்பல் கைப்பற்றப்பட்டபோது இவர் தீரமாகச் செயற்பட்டு காரியமீட்டினார் என்று கூறப்படுகின்றது. ஆயினும் இவரது கப்பலில் வேலை செய்த சக மாலுமிகள் இவரை கவனக்குறைவானவர் என்றும் கூறுகின்றனர்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கப்டன் ரிச்சாட் பிலிப்ஸ் ஐக்கிய அமெரிக்காவில் வின்செஸ்டர், மச்சுசுசேட்ஸ் இல் பிறந்தார். அத்துடன் வின்செஸ்டர் உயர் பள்ளியில் 1973இல் தனது படிப்பை முடித்துக்கொண்டார். முதலில் சர்வதேசச் சட்டங்கள் பற்றிய பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பினாலும் இறுதியில் மசசுசெட்ஸ் மாரிடைம் அக்டமியில் தனது பட்டப்படிப்பை 1979இல் முடித்துக்கொணாடார். தனது பாடசாலைக் காலத்தில் தானுந்தி ஓட்டுனராகப் பணியாற்றினார். அத்துடன் 1987 இல் அன்ரியா கொக்கியோ எனும் தாதியினை மணம் முடித்ததுடன் டானியல் மற்றும் மரியா போன்ற குழந்தைகளில் தந்தையுமாவார்.

மேயர்ஸ்க் அலபாமா கடற்கொள்ளை நிகழ்வு[தொகு]

ஏப்ரல் 8 2009 இல் மேயர்ஸ்க் அலபாமா கப்பலினுள் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் ஏறிக்கொண்டனர். இந்த நிகழ்வு நடக்கும் போது சோமாலியக் கடற்கரையில் இருந்து சுமார் 440 கி.மீ தொலைவில் மேயர்ஸ்க் அலபாமா பயனித்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கென்னியாவின் மொம்பாஸா துறைமுகத்தை நோக்கிப் பயனித்துக்கொண்டிருந்த இந்தக் கப்பலில் சுமார் 20 மாலுமிகள் இருந்ததுடன் 17000 மெட்ரிக்தொன் எடையுடைய பொருட்கள் இருந்தன. இதில் கென்யா, உகண்டா, சோமாலியா ஆகிய நாடுகளுக்கான உதவிப் பண்டங்கள் சுமார் 5000 மெட்ரிக்தொன் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது[2].

கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறியதும் பெரும்பாலான மாலுமிகள் இயந்திர அறையில் அடைக்கலம் தேடிக்கொண்டனர். இவர்களைத் தேடிச் சென்ற ஒரு கடற்கொள்ளையனை மாலுமிகள் மடக்கிப் பிடித்துக்கொண்டனர். இவ்வாறு பிடித்து 12 மணிநேரம் பிணையக் கைதியாக மாலுமிகள் வைத்திருந்த இந்தக் கடற்கொள்ளையனை ஏற்றிக்கொண்டு கப்பலில் இருந்த உயிர்காப்புப் படகில் கடற்கொள்ளையர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆயினும் கடற்கொள்ளையர்கள் இதற்கு உடன் பட்டாலும் தங்களுடன் கப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸையும் ஏற்றிக்கொண்டதுடன் அவரை விடுவிக்க மறுத்து சோமாலியா நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அத்துடன் கப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸ் விடுவிக்கப்படவேண்டுமானால் கப்பத்தொகை வேண்டும் என்றும் வேண்டினர்.

ஏப்ரல் 8 இச்செய்தி எட்டிய அமெரிக்க கடற்படைக் கப்பல்களான யுஎஸ்எஸ் பெயின்பிரிச் மற்றும் யுஎஸ்எஸ் ஹாலிபேர்ட்டன் ஆயின சம்பவ இடம் நோக்கி விரைந்து நகர்ந்து ஏப்ரல் 9 அன்று சம்பவ இடத்தை அடைந்தனர். மேயர்ஸ்க் அலபாமா சம்பவ இடத்தில் இருந்து தனது பயன இலக்கான மொம்பாஸ், கென்யா நோக்கி இராணுவப் பாதுகாப்புடன் நகரத் தொடங்கியது. ஏப்ரல் 9 முதல் கடற்படையினருக்கும் மேயர்ஸ்க் அலபாமா உயிர்காப்புப் படகில் ரிச்சார்ட் பிலிப்சை பணயக்கைதியாக வைத்திருந்த சோமாலியக் கடற்கொள்ளையருக்குமிடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியது. மூன்று நாட்களின் பின்னர் அப்டுவாலி மூஸ் எனும் கடற்கொள்ளையன் கப்பம் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கக் கப்பலை வந்தடைந்தான். அதே வேளை ஏனைய மூன்று கடற்கொள்ளையரும் தொடர்ந்தும் ரிச்சார்ட் பிலிப்ஸை பணயக்கைதியாக உயிர்காப்புப் படகினுள் வைத்திருந்தனர்.

ஏப்ரல் 12, அமெரிக்க கடற்படையின் சீல் படையினர் உயிர்காப்புப் படகினுள் இருந்த கடற்கொள்ளையரை குறிபார்த்துச் சுடும் துப்பாக்கியினால் சுட்டதுடதனால் சம்பவ இடத்தினிலேயே மூன்று கடற்கொள்ளையரும் கொல்லப்பட்டனர். கப்டன் ரிச்சாட் பிலிப்ஸ் உயிருடன் மீட்கப்பட்டார். இதேவேளை பேச்சுவார்த்தைக்காக கப்பலில் இருந்த நான்காம் கடற்கொள்ளையனை அமெரிக்கப்படையினர் கைதுசெய்ததுடன் நீதி மன்றில் பின்னர் நிறுத்தப்பட்டான். நீதி மன்றில் கடற்கொள்ளையில் ஈடுபட்டமைக்காக 33 வருடங்களை சிறையில் கழிக்க வேண்டிய நிலமை அப்டுவாலி மூஸூற்கு ஏற்பட்டது.

திரைப்படம்[தொகு]

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ரிச்சார்ட் பிலிப் A Captain's Duty: Somali Pirates, Navy SEALS, and Dangerous Days at Sea எனும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகத்தை மையமாகக்கொண்டு பிரபலமாக ஹொலிவூட் நாயகன் டொம் ஹாங்ஸ் நடிப்பில் திரைப்படம் ஒன்று அக்டோபர் 11, 2013 இல் வெளியானது.

உசாத்துணைகள்[தொகு]

  1. Orr, Jimmy (May 10, 2009). "Obama meets Captain Richard Phillips and then plays hoops". The Christian Science Monitor.. http://www.csmonitor.com/USA/Politics/The-Vote/2009/0510/obama-meets-captain-richard-phillips-and-then-plays-hoops. பார்த்த நாள்: 14 October 2013. 
  2. கடத்தல் பற்றிய சிஎன்என் செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சார்ட்_பிலிப்ஸ்&oldid=2578301" இலிருந்து மீள்விக்கப்பட்டது