டொம் ஹாங்க்ஸ்
டொம் ஹாங்க்ஸ் | |
---|---|
2004 பெப்ரவரியில் டாம் ஹாங்ஸ் | |
பிறப்பு | ஜூலை 9, 1956 கொன்கோட், கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | ரீட்டா வில்சன் (1988-இன்றுவரை) சமந்தா லீவ்ஸ் - (1978-1987) |
தாமஸ் ஜெஃப்ரி ஹாங்க்ஸ் (Thomas Jeffrey Hanks) (பிறப்பு: சூலை 9, 1956) என்பவர் அமெரிக்க நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். ஹாங்க்ஸ் அப்பல்லோ 13 (திரைப்படம்) , சேவிங் பிறைவேட் றையன் , காஸ்ட் அவே,ஸ்பிளாஷ், பிக், டர்னர் மற்றும் ஹூச், ஸ்லீப்ப்லெஸ் இன் சேட்டில், யூ ஹேவ் காட் மெயில் (உங்களுகு மின்னஞ்சல் வந்துள்ளது) , டாய் ஸ்டோரி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
ஹாங்க்ஸ் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் உடன் இணைந்து ஐந்துத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சேவிங் பிறைவேட் றையன் (1998), 2004 இல் தெ டெர்மினல், 2015 இல் பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ், 2017 இல் தி போஸ்ட் . 2001 ஆம் ஆண்டில் பேண்ட் ஆஃப் பிரதர்ஸ் எனும் குறுந் தொடரின் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராகவும் உருவானார். 2010 இல் எச் பி ஒ தொலைக்காட்சியில் வெளியான தெ பசிபிக் குறுந் தொடரை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் ஹாங்க்ஸ் ஆகிய இருவரும் நிருவாகத் தயாரிப்பாளாராகப் பணியாற்றினர்.
அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவில் ஹாங்கிசினுடைய திரைப்படங்கள் $4.5 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றுத் தந்தது. உலகம் முழுவதும் சுமார் $9.0 பில்லியன் வசூலைப் பெற்றுத் தந்தது.[1] வட அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்றுத் தந்த நடிகர்களில் ஹான்ங்க்ஸ் மூன்றாவது இடம் பிடித்தார்.[2]
இவரின் வாழ்க்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளார். மேலும் 1993 ஆம் ஆண்டில் ஜொனாதன் டெம்மி இயக்கத்தில் வெளிவந்த பிலடெல்ஃபியா எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது பெற்றார். 1994 இல் வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மக்களின் தேர்வு விருது பெற்றார். அகாதமி விருதை தொடர்ச்சியாக இருமுறை பெற்ற இரண்டு நபர்களில் இவரும் ஒருவர்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]தாமஸ் ஜெஃப்ரி ஹான்ங்க்ஸ் [4] சூலை 9, 1956 இல் கொன்கோட் , கலிபோர்னியாவில் பிறந்தார்.[5][6] இவரின் தந்தை ஜனத் மார்லின் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தவர். இவரின் தாய் இதினரண்ட் குக் அமோஸ் மெஃபோர்டு ஹாங்க்ஸ்.[7][8][9] இவர் போர்த்துக்கீசியர் மரபைச் சார்ந்தவர்.[10] இவரின் தந்தை இங்கிலாந்து மரபினர்.[11] ஹாங்க்சினுடைய பெற்றோர் 1960 இல் மணமுறிவு பெற்றனர். இவர்களுக்கு சாண்ட்ரா, லேரி, மற்றும் டொம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். டொம் தனது தந்தையுடன் சென்றார். ஹாங்க்சினுடைய குடும்பம் கத்தோலிக்க திருச்சபை மற்றும் மொர்மனியம் சமயத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.[12] 1965 இல் இவரின் தந்தை பிரான்சஸ் வூங் என்பவரைத் திருமணம் புரிந்தார். வூங் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தார். இந்தத் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இதில் இரண்டு குழந்தைகள் ஹாங்க்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் வரை அவருடன் இருந்தனர். ஹாங்க்ஸ் ஓக்லாந்து , கலிபோர்னியாவில் உள்ள ஸ்கை லைன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றபோது சவுத் பசிபிக் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.[13]
விருதுகள்
[தொகு]ஆஸ்கார் விருது
[தொகு]- 1988 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் பிக்
- 1993 வென்ற விருது சிறந்த நடிகர் பிலடெல்பியா
- 1994 வென்ற விருது சிறந்த நடிகர் ஃபோரெஸ்ட் கம்ப்
- 1998 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் சேவிங் பிறைவற் றையான்
- 2000 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் காஸ்ட் அவே
- 2000 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதினை காஸ்ட் அவே திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Tom Hanks Movie Box Office Results". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 6, 2014.
- ↑ "People Index." Box Office Mojo.
- ↑ Weiner, Rex (March 28, 1995). "Tom Hanks Joins Back-to-Back Oscar Elite" (in en-US). Variety. https://variety.com/1995/film/news/tom-hanks-joins-back-to-back-oscar-elite-1201345110/.
- ↑ "Tom Hanks Biography". Biography.com (FYI (TV channel)|FYI / A&E Networks). பார்க்கப்பட்ட நாள் August 6, 2014.
- ↑ "Monitor". Entertainment Weekly (1215): p. 20. July 13, 2012.
- ↑ "Tom Hanks Biography (1956-)". FilmReference.com. பார்க்கப்பட்ட நாள் November 28, 2014.
- ↑ "Tom Hanks Biography (1956-)". FilmReference.com. பார்க்கப்பட்ட நாள் November 28, 2014.
- ↑ Stated on Inside the Actors Studio, 1999
- ↑ Gardner, David (January 1, 1999). Tom Hanks. Blake. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85782-327-1.
- ↑ "Honor: Portuguese American actor Tom Hanks awarded Presidential Medal of Freedom – Washington, DC". Portuguese American Journal. 23 November 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2018.
...Tom Hanks was born in Contra Costa county, California, in 1956, of Portuguese, British and Irish descent. His maternal ancestors were Portuguese pioneers in California with roots in the Azores. His mother Janet Marylyn Frager (Fraga) was a hospital worker...
- ↑ யூடியூபில் Friday Night with Jonathan Ross, January 2008
- ↑ Terry Mattingly (March 25, 2009). "Mattingly: Tom Hanks talks about religion". Scripps Howard News Service. Archived from the original on March 28, 2009. பார்க்கப்பட்ட நாள் December 14, 2012.
- ↑ Silverman, Stephen (April 15, 1998). "Hanks Thanks School". தெ பீப்பிள் இம் மூலத்தில் இருந்து மார்ச் 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304062431/http://www.people.com/people/article/0,,619462,00.html. பார்த்த நாள்: February 1, 2018.
வெளியிணைப்புகள்
[தொகு]- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- 1956 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- ஆங்கில அமெரிக்கர்கள்
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்