ராமகிரி பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமகிரி பாளையம் திண்டுக்கலில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் சாலையில் அமைத்துள்ள ஊர். இது நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது. ராமகிரியை சாமா நாயக்கர்கள் என்ற ராஜகம்பளம் குடியினர் 40 தலைமுறையாக ஆட்சி செய்து வந்துள்ளனர். இவ்வூரில் ஒரு கோட்டையை உருவாக்கி அங்கு தங்கள் இன மக்களையும் சுற்று பட்டிகளில் வாழும் பிற மக்களையும் நிர்வாகித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரும்பு முறுக்கி சாமா நாயக்கர், தலைவெட்டி சாம நாயக்கர் என்ற பட்டங்களும் உண்டு. இவர்கள் பழனி கோவிலுக்கு பல சத்திரங்களைக் கட்டி உள்ளனர், இவர்கள் கலியாண நரசிம்ம சாமி கோவிலை அமைத்ததோடு பல தானங்களையும் செய்து வந்துள்ளனர். இவர்கள் பல ஊர்களை உருவாக்கி உள்ளனர் மேலும் பிற்காலத்தில் தமிழகதிற்கு குடியேறிய தங்கள் இனத்தவர்களான வடுகர் என்று சொல்லும் நாயக்கர் இன மக்களை தாங்கள் வாழும் பகுதியில் குடியமர்த்தினர் .[1]

மேற்கோள்கள்[தொகு]

<references>

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
  1. http://princelystatesofindia.com/Glossary/t_w.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமகிரி_பாளையம்&oldid=2715737" இலிருந்து மீள்விக்கப்பட்டது