வடுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்துவந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர். [1]

எருமை என்னும் 'வடுகர் பெருமகன்' நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. [2]

வடுகர் பேசும் மொழியைத் தமிழர் 'கல்லா நீண்மொழி' என்றனர். வேட்டைநாயுடன் அவர்கள் செல்வார்களாம். புலி உண்டபின் மாறையில் போட்டுவிட்டுப் போன மான்மறி, மூங்கில்நெல் அரிசி, பசு வெண்ணெய் கலந்து சமைத்த புலவு உணவை விருந்தினர்களுக்குத் தேக்கிலையில் பகிர்ந்து அளிப்பார்களாம். அவரது சிறுவர்கள் இரும்பைப் பூவை அம்பெய்து உதிர்த்து அவர்கள் மேய்க்கும் காளைமாடுகளை உண்ணச் செய்வார்களாம். அவற்றை உண்ணவரும் மான்களை விரட்டி ஓட்டுவார்களாம். [3]

வெளி இணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  2. (அகம் 253)
  3. (அகம் 107)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகர்&oldid=1825818" இருந்து மீள்விக்கப்பட்டது