ராபின்சன் குரூசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபின்சன் குரூசோ
Robinson Crusoe
முதற்பதிப்பின் முகப்பு அட்டை
நூலாசிரியர்டானியல் டீஃபோ
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைசாதனை, வரலாற்றுப் புனைவு
வெளியீட்டாளர்வில்லியம் டெய்லர்
வெளியிடப்பட்ட நாள்
25 ஏப்ரல் 1719 (304 ஆண்டுகள் முன்னர்) (1719-04-25)

ராபின்சன் குரூசோ (Robinson Crusoe)[a] டானியல் டீஃபோ எழுதிய ஒரு புதினம் ஆகும். இது முதலில் 1719, ஏப்ரல் 25 அன்று வெளியிடப்பட்டது. முதல் பதிப்பானது, கதாநாயகன் ராபின்சன் குரூசோவை அதன் எழுத்தாளர் என்று பதிப்பிட்டது, இதனால் பல வாசகர்கள் அவர் உண்மையான நபராகவும், இப்புத்தகம் உண்மையான சம்பவங்களின் பயணப் பயணம் என எண்ணினர்.[1]

கடிதம், ஒப்புதல், மற்றும் நீதிபோதனை வடிவங்களில், இந்நூலின் தலைப்பு கதைப் பாத்திரத்தின் சுயசரிதையாக எழுதப்பட்டது. கதைப்பாத்திரத்தின் இயற்பெயர் ராபின்சன் கிரெட்ஸன்னர் - ஒரு கப்பல் விபத்தில் சிக்கியவர். டிரினிடாட் அருகே உள்ள ஒரு தொலைதூர வெப்பமண்டலப் பாலைவனத் தீவில் 28 ஆண்டுகள் செலவழிக்கிறார். இறுதியில் மீட்கப்படுவதற்கு முன் இவர் தன்னின உண்ணிகள், கைதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டார். இக்கதையானது, இன்றைய சிலியின் பகுதியான "மாஸ் அ டைரா" என்றழைக்கப்படும் பசிபிக் தீவில் கப்பல் விபத்தில் சிக்கி நான்கு ஆண்டுகள் உயிர் பிழைத்த இசுக்காட்டிய நாட்டவரான அலெக்சாந்தர் சேல்கிர்க் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக கருதப்படுகிறது, 1966 ஆம் ஆண்டில் இந்த தீவானது ராபின்சன் குரூசோ தீவு என மறுபெயரிடப்பட்டது.[2]

எளிய கதைநடையைக் கொண்டிருந்த போதிலும், இலக்கிய வரலாற்றில் யதார்த்தமான கற்பனைக் கதைகளின் தோற்றத்திற்கு வழிவகுத்ததற்கான பெருமையைப் பெற்றது. இது ‘முதல் ஆங்கிலப் புதினம்' என்ற சிறப்பிற்கு ஒரு போட்டியாளராக கருதப்படுகிறது.[3] 1719 ஆம் ஆண்டின் முடிவில், இந்தப் புத்தகம் ஏற்கனவே நான்கு பதிப்புகள் மூலம், வரலாற்றில் மிகவும் பரவலாக வெளியிடப்பட்ட புத்தகங்களில் ஒன்றானது. திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி என்று பல பரிமாணங்களில் வெளிவந்து பிரபலமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fiction as Authentic as Fact
  2. Severin, Tim, In search of Robinson Crusoe, New York: Basic Books, 2002 ISBN 0-465-07698-X, pp. 23–24.
  3. "Defoe", The Oxford Companion to English Literature, ed. Margaret Drabble (Oxford: Oxford University Press, 1996), p. 265.
  1. முழுமையான தலைப்பு: The Life and Strange Surprizing Adventures of Robinson Crusoe, Of York, Mariner: Who lived Eight and Twenty Years, all alone in an un-inhabited Island on the Coast of America, near the Mouth of the Great River of ஓரினோகோ; Having been cast on Shore by Shipwreck, wherein all the Men perished but himself. With An Account how he was at last as strangely deliver'd by Pyrates

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபின்சன்_குரூசோ&oldid=3665498" இலிருந்து மீள்விக்கப்பட்டது