கடிதப் புதினம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கடிதப் புதினம் அல்லது கடித நாவல் என்பது ஒரு வகை உரைநடை இலக்கியம் ஆகும்.
கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான கடிதங்கள் மூலமாக கதையை நகர்த்திச் செல்வது இவ்வகை இலக்கியம் ஆகும். கடிதப் புதினங்களில் பெரும்பாலும் கடிதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சில சமயங்களில் நாட்குறிப்புப் பதிவுகள், செய்தித்தாள் குறிப்புகள் போன்றவையும் பயன்படுத்தப்படும். புதின வகைகளில் முதன் முதலில் உருவாக்கப்பட்டவைகளில் கடிதப் புதினமும் ஒரு வகை ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவ்வகை இலக்கியங்கள் புகழ்வாய்ந்தவையாக திகழ்ந்தன. எசுப்பானிய மொழியில் எழுதப்பட்ட "'பிரிசன் ஆப் லவ்"' என்ற புதினம் முதன் முதலில் எழுதப்பட்ட கடிதப் புதினமாகும்.
வகைகள்[தொகு]
கடிதப் புதினங்கள் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. ஒரே கதாபாத்திரம் எழுதும் கடிதங்களைக் கொண்ட புதினம், இரு கதாபாத்திரங்கள் இடையேயான கடிதப் போக்குவரத்துகளைக் கொண்ட புதினம், இரண்டுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடையேயான கடிதங்களின் மூலமான கதையைக் கொண்ட புதினங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.