ராஜமுத்திரை (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜமுத்திரை
நூலாசிரியர்சாண்டில்யன்
உண்மையான தலைப்புராஜமுத்திரை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைவரலாற்று நாவல்
வெளியிடப்பட்டதுவானதி பதிப்பகம்
பக்கங்கள்620

ராஜமுத்திரை என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பாண்டியர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.

கதை மாந்தர்கள்[தொகு]

  • தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற வார்த்தைகளை மெய்பிக்கிறது இந்த ராஜமுத்திரை வரலாற்று நாவல். பாண்டிய இளவரசன் வீரபாண்டியனின் புத்திசாதூரியத்தைப் போற்றிக் கொண்டாடும் கதையாகத் திகழ்கிறது இப்புதினம். பாண்டிய நாட்டின் பொக்கிஷமாகவும் பெரும் செல்வத்தை சேர்க்க காரணியாகவும் இருக்கும் முத்துக்கள் களவாடப்படுகிறது.அக்களவை கண்டறிய தன் தம்பியான வீரபாண்டியனை கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவர். பாண்டிய நாட்டின் இரண்டாம் தலைநகரமாக இளவரசர்களின் ஆட்சியில் இருந்த கொற்கை மண்மூடிய பிறகு வெறும் வியபாரத் தளமாக மாறிவிடுகிறது. நாட்டின் சிறந்த முத்துக்கள் எல்லாம் அரசாங்க கஜானாவிற்கு வர வேண்டும் என்ற உத்தரவு நிறைவேறாமல் முத்துக்கள் காணாமல் போவதற்குப் பின்னே ஏதோ ஒரு சதி நடப்பதை உணர்ந்த மன்னன் தன் மகளையும் தம்பியையும் வணிகர்கள் மாதிரி கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார். பெருமுத்துக்களை எல்லாம் களவாடிய சேரமன்னன் வீரரவி அதனோட நிற்காமல் கொற்கையின் கோட்டையையும் தன் வசமாக்க கொற்கையிலே இருப்பதை அறிந்த கொண்ட வீரபாண்டியன் அவர்களை வளைத்து பிடித்து விட முயன்றாலும் தப்பித்துப் போனவர்கள் பாண்டிய மன்னன் மகளான முத்துக்குமரியை கடத்தியும் சென்றுவிடுகின்றனர். கொற்கை கோட்டை அதிகாரியின் மகளான இளநங்கையிடம் காதலில் வீழ்ந்து போன வீரபாண்டியன் அவளையே தனக்கு உபதளபதியாக நியமித்து சேரனுடன் போர் தொடுக்கும் முடிவை எடுக்கிறான். சேரனிடம் இருக்கும் ஆட்பலத்தை விடத் தங்களிடம் குறைவே என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டங்களை வகுக்கும் வீரபாண்டியன் முதலில் கோட்டாற்றுக் கரைக் கோட்டையை சேரர்களிடமிருந்து கைப்பற்றுகிறான். பாண்டிய வீரர்களுடன் வீரராகப் புகுந்து ஒற்று வேலையைப் பார்த்து பாண்டிய மகளைக் கடத்திய போசளர் படைத்தலைவனான சிங்கணனை பிடித்த வீரபாண்டியன் அவனைக் கொண்டே சேர மன்னன் வீரரவியுடன் போர் புரிய ஆயத்த வேலை செய்கிறார். கோட்டாற்றுக் கரைக் கோட்டையைப் பிடிக்கும் திட்டங்கள் நுணுக்கமாகவும் அதில் இருக்கும் குறைகளால் ஏற்பட்ட சறுக்குகளைச் சாமர்த்தியமாக வீரபாண்டியன் சரிசெய்வதையும் தன் மனம் விரும்பிய இளநங்கையை அக்கோட்டையிலே காந்தர்வ மணம் புரிந்து இரண்டுநாள் அவளுடன் வாழ்ந்த பிறகு சாவின் வாசலை தொட்டவனை அம்மனைவி மீட்டெடுக்கும் விதத்தையையும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது இம்முதல் பாகத்தில்.
    சிங்கணனை கொண்டு சேரனை பிடிக்க வீரபாண்டியன் போட்ட திட்டத்தில் இருக்கும் சிறு ஓட்டைகளைக் கொண்டு சிங்கணன் வீரபாண்டியனையே அழிக்க செய்யும் திட்டத்தை அவனுடன் இருந்து பார்த்தது போல புரிந்து கொண்டு தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் இளவரசனின் ஆளுமையை உலகிற்குப் பறைசாற்றுவது போல் தன் மொத்த நடவடிக்கையையும் எவரும் அறியாமல் பெரும் சேர படையை வெற்றிக் கொள்கிறான் வீரபாண்டியன்.பல்லவன் என்ற ராஜசிம்ம பல்லவன்
  • மைவிழிச்செல்வி
  • ரங்கபதாகாதேவி
  • விக்கிரமாதித்தன் (சாளுக்கிய மன்னன்)
  • யாங்சின்
  • ஸ்ரீராம புணயவல்லபர்
  • தண்டிமாகாகவி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜமுத்திரை_(புதினம்)&oldid=3260207" இலிருந்து மீள்விக்கப்பட்டது