ராஜகிரி தாவூத் பட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகிரி தாவூத் பாட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1999
கல்வி பணியாளர்
40
மாணவர்கள்708
அமைவிடம், ,
வளாகம்சாலியமங்கலம் சாலை, பாபநாசம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

ராஜகிரி தாவூத் பாட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Rajagiri Dawood Batcha College of Arts And Science, Papanasam)[1] 1999-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானிய குழுவினால்[3] அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி. தாவூத் பாட்சா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை 1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைவரான மருத்துவர் எம்.ஏ. தாவூத் பாட்சா இந்த கல்வி அறக்கட்டளையினை நிறுவினார்.

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் சாலியமங்கலம் சாலையில் அமைந்துள்ளது.

படிப்புகள்[தொகு]

இளநிலை[தொகு]

  • ஆங்கிலம்
  • தமிழ் இலக்கியம்
  • உணவக மேலாண்மை
  • உயிர்தொழில்நுட்பவியல்
  • உயிர்வேதியியல்
  • நுண்ணுயிரியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பவியல்
  • இயற்பியல்
  • காட்சி தொடர்பியல்

முதுநிலை[தொகு]

  • ஆங்கிலம்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பவியல்

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
  2. http://www.bdu.ac.in
  3. https://www.ugc.ac.in