ரவீஷ் குமார் (இந்திய தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவீஷ் குமார் (இந்திய தூதர்)
Indian Foreign Service
பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவுக்கான இந்திய தூதர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஜூலை 2020
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்வாணி ராவ்
அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
4 ஆகஸ்ட் 2017 – 6 ஏப்ரல் 2020
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்கோபால் பகலே
பின்னவர்அனுராக் ஸ்ரீவஸ்தவா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 26, 1971 (1971-01-26) (அகவை 53)
பாகல்பூர், பிகார், இந்தியா
தேசியம்இந்தியன்
துணைவர்ரஞ்சனா ரவீஷ்
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிமவுண்ட் அசிசி
டெல்லி பொதுப் பள்ளி
ஹன்ஸ் ராஜ் கல்லூரி
வேலைஇராஜதந்திரி

ரவீஷ் குமார் ஓர் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி. இவர் தற்போது பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக இருக்கிறார். கூடுதலாக எஸ்தோனியாவுக்கும் தூதராக உள்ளார். இவர்ஹெல்சின்கியில் வசித்து வருகிறார்.[1] இவர் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சின் முன்னாள் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்தார். இவர் இந்த பொறுப்பை பெற்ற மிக இளைய அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஆவார். இந்த பொறுப்பிற்கு நிநியமிக்கப்படுவதற்கு முன்பு ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இந்தியத் தூதராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ரவீஷ் குமார் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகரில் பிறந்தார். பாகல்பூரின் மவுண்ட் அசிசி பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை கல்விப் பயின்றார். பின்னர் டெல்லி பொதுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை கல்விப் பயின்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வரலாற்றில் ஹானர்ஸ் உடன் இளங்கலை பட்டம் பெற்றார். [2]

பணிகள்[தொகு]

ரவீஷ் குமார் 1995 இல் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வானவர். இவர் 1995 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவையில் சேர்ந்தார். 1997 ஆம் ஆண்டுல் ஜகார்த்தாவில் உள்ள இந்திய மிஷனில் தனது இராஜதந்திர வாழ்க்கையைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து பூட்டானின் திம்புவில் செயலாளராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் வளர்ச்சி உதவி திட்டங்களை கவனித்தார். 2004-2007 வரை புதுடெல்லியில் பணிபுரிந்தபோது, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசை உள்ளடக்கிய கிழக்கு ஆசியா கூட்டமைப்பில் அதிகாரியாக இருந்தார். பின்னர் இவர் லண்டனுக்கு இருதரப்பு அரசியல் உறவுகள் மற்றும் இங்கிலாந்து நாடாளுமன்றத்துடனான ஈடுபாடுகளுக்கு அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இவர் செப்டம்பர் 2010 முதல் ஆகஸ்ட் 2013 வரை ஜகார்த்தா திட்டத்திற்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு ஆகஸ்ட் 2013 முதல் ஜூலை 2017 வரை பிராங்பேர்ட்டில் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். குமார் ஜூலை 2017 முதல் 2020 ஏப்ரல் வரை செய்தித் தொடர்பாளர் மற்றும் இணை செயலாளராக (வெளி விளம்பர பிரிவு) இருந்தார். [3]

குறிப்புகள்[தொகு]

  1. "Shri Raveesh Kumar appointed as the next Ambassador of India to Finland". www.mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 June 2020.
  2. "Consul General, Frankfurt Germany". Archived from the original on 2018-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-09-20.
  3. "Ambassador, Helsinki Finland".