ரக்தகண்டசுவாமி கோயில் (ஓமல்லூர் கோயில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரக்தகண்ட சுவாமி கோயில் (ஓமல்லூர் கோயில்) இந்தியாவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ஓமல்லூரில் உள்ள கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாகும். இது அய்யப்பன் பிறந்த இடமான பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள, யாத்ரீகர்கள் தலமாகும்.

திருவிழாக்கள்[தொகு]

மலையாள வருடத்தில் மேடம் மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் வருடாந்திர திருவிழாவிற்கு இந்தக் கோயில் புகழ்பெற்றதாகும்.[1] அத்திருவிழா ஓமல்லூரையும், அதனைச் சுற்றியும் உள்ள 10 கரயோகங்களால் (கிராம சமூகங்கள்) கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் அச்சன்கோயில் ஆற்றுக்கு ஆராட்டு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. நெற்றிப்பட்டம் அலங்கரிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட யானைகள் இந்த ஆராட்டின் முக்கியக் கூறாகும்.

அமைவிடம்[தொகு]

ஓமல்லூர், மாவட்டத் தலைமையகமான பத்தனம்திட்டாவிலிருந்து தெற்கில் 4 கி.மீ. தொலைவிலும், எம்சி சாலையிலிருந்து 11 கி.மீ. (கோட்டயம் - திருவனந்தபுரம் வழித்தடம்) தொலைவிலும் உள்ளது.[2]

சிறப்பு[தொகு]

இக்கோயிலில் கி.பி.1952-ம் ஆண்டு தங்கக் கொடி மரம் நிறுவப்பட்டது. இங்கு கல்லால் ஆன நாதஸ்வரம், கல்லினால் செய்யப்பட்ட சங்கிலி உள்ளிட்ட அருமையான கல் சிற்பங்கள் உள்ளன.

வரலாறு[தொகு]

கோயிலின் வரலாறானது கொன்னி நகருக்கு அருகில் உள்ள கல்லெலி என்ற கிராமத்துடன் தொடர்புடையதாகும். கேரள மக்கள் விளையாடும் பாரம்பரிய விளையாட்டு சூட்டு விளையாட்டில் தோற்றதன் காரணமாக உள்ளூர் மக்களால் கல்லெலியில் இருந்து மூலவரை அச்சன்கோயில் ஆற்றில் வீசிவிட்டனர்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rektha Kanda Swamy Temple Omalloor Pathanamthitta - Temples in Kerala". Just Kerala. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
  2. "Kadammanitta Temple, famous for Padayani festival in Pathanamthitta". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.

படத்தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]