உள்ளடக்கத்துக்குச் செல்

ஓமல்லூர்

ஆள்கூறுகள்: 9°14′48.3″N 76°45′3.47″E / 9.246750°N 76.7509639°E / 9.246750; 76.7509639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமல்லூர்
Omalloor
சிற்றூர்
ஆள்கூறுகள்: 9°14′48.3″N 76°45′3.47″E / 9.246750°N 76.7509639°E / 9.246750; 76.7509639
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா
பரப்பளவு
 • மொத்தம்14.54 km2 (5.61 sq mi)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்17,611
 • அடர்த்தி1,200/km2 (3,100/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
689647
தொலைபேசி குறியீட்டு எண்0468
வாகனப் பதிவுKL-03

ஓமல்லூர் (Omallur) என்பது கேரளத்தில் உள்ள பதனம்திட்டா மாவட்ட தலைமையகமான பத்தனம்திட்டாவிற்கு தெற்கே 3.5   கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். ஓமல்லூரில் ஆண்டுதோறும் நடக்கும் மாட்டுச்சந்தை பிரபலமானது, இது மீனம் (அக்டோபர்) மாதத்தில் நடைபெறும். இந்த சந்தையைக் காண உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் ஏராளமானவர்கள் வருகின்றனர். [3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

ஓமல்லூரில் கிறித்துவம் மற்றும் இந்து சமயத்தின் பல்வேறு பிரிவினர் வாழ்கின்றனர். ஈழவர், நாயர், விசுவகர்மாக்கள், வீரசைவர்கள் மற்றும் பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் போன்ற இந்து சமயத்தின் முக்கிய பிரிவினர் உள்ளனர். கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்களில் கிழக்கு மரபுவழி திருச்சபையினர், யாக்கோபைட் திருச்சபையினர், மார்தோமா திருச்சபையினர், மலங்கரா கத்தோலிக்கத் திருச்சபையினர், புனித தாமஸ் எவாஞ்சலிகல் திருச்சபையினர், தென்னிந்தியத் திருச்சபையினர், பெந்தேகோஸ்து திருச்சபையினர் மற்றும் பிற முக்கிய சகோதரப் கிறிஸ்தவ பிரிவினர் வாழ்கின்றனர்.

விழாக்கள்[தொகு]

கோவில் திருவிழாக்கள் (உற்சவம்) மற்றும் தேவாலய விருந்துகள் (பள்ளிபெருநாள்) கிராம விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. ஓமல்லூரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ரேக்த காந்த சுவாமி கோயில் ஓமல்லூரில் அமைந்துள்ள ஒரு பிரமாண்டமான கோயிலாகும், இது கி.பி 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது, இதன் 10 நாள் ஆண்டு விழா (உற்சவம்) பிரபலமானது. இது சபரிமலை யாத்ரீகர்களுக்கான முக்கிய யாத்ரீக மையமாகும். புனித தாமஸ் ஆர்த்தடாக்ஸ் வலியப் பள்ளி (தேவாலயம்) கிறிஸ்தவர்களின் மற்றொரு முக்கிய வழிபாட்டுத் தலமாகும். மஞ்சனிகார தயாரா யாத்திரை முக்கியத்துவமும் பிரபலமானதுமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மஞ்சனிகாராவில் உள்ள புனித மூத்தவரான இக்னேஷியஸ் எலியாஸ் III கல்லறைக்கு பாதயாத்திரையாக வருகிறனர். செயின்ட் பீட்டர்ஸ் யாக்கோபைட் தேவாலயம், செயின்ட் ஸ்டீபன்ஸ் யாக்கோபைட் தேவாலயம், புனித தாமஸ் மலங்கரா கத்தோலிக்க தேவாலயம், புத்தன்பீடிகா, செயின்ட் பீட்டர்ஸ் மலங்கரா கத்தோலிக்க தேவாலயம், சீக்கனல் மற்றும் புனித தாமஸ் மார் தோமா தேவாலயம், சீக்கனல் ஆகியவை ஓமல்லூரில் வழிபடும் மற்ற முக்கியமான இடங்கள். அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள மாத்தூர் காவு பகவதி கோயில் புகழ்பெற்ற இந்து கோவிலாகும். அச்சன்கோவில் ஆறு ஓமல்லூர் பஞ்சாயத்தின் கிழக்கு எல்லையாக உள்ளது. கும்பம் என்ற மலையாள மாதத்தின் வருடாந்த படயணி சடங்குகளுக்கு புகழ்பெற்ற தாழூர் பகவதி கோயில் அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பள்ளிகள்[தொகு]

ஓமல்லூர் பதானம்திட்டா நகரத்திற்கு மிக அருகில் இருப்பதால் சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் அமிர்தா வித்தியாலயம், கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளி, பவனின் வித்யா மந்திர் மற்றும் ஆர்ய பாரதி உயர்நிலைப்பள்ளி ஆகியவை அடங்கும். ஆர்ஷா வித்யாலயா ஓமல்லூரில் ஒரு முக்கிய பள்ளி, மழலையர் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை இங்கு வகுப்புகள் உள்ளன. 1805 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஓமல்லூர்யில் 12 ஆம் வகுப்பு வரை கல்வி வழங்கப்படுகிறது.[4][5]

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஓமல்லூரின் மக்கள் தொகை 17611 ஆகும். இதில் 8189 ஆண்களும், 9412 பெண்களும் உள்ளனர்.

நடு கேரளாவில் உள்ள பல சமூகங்களைப் போலவே, ஒமல்லூரும் உழைக்கும் வயது கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் வருவாய் 35% ஆகும். பல குடும்பங்களுக்குச் சொந்தமான சிறிய சில்லறை கடைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்றவை உள்ளன.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

  • தந்தை வி.சி. சாமுவேல் - உலக தேவாலயங்களின் கவுன்சில் தலைவர்
  • ஓமல்லூர் செல்லம்மா - மலையாள நாடகம் மற்றும் 1950 களின் திரைப்பட நடிகை.
  • ஓமல்லூர் பிரதபச்சந்திரன் - மலையாள திரைப்பட நடிகர்
  • கேப்டன் ராஜு - மலையாள திரைப்பட நடிகர்

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Omalloor at a glance". Archived from the original on 18 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Census Of India - Omalloor Population". The Registrar General & Census Commissioner. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  3. http://www.thehindu.com/2004/03/09/stories/2004030907430300.htm
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
  5. http://www.icbse.com/schools/ghss-omalloor/32120401809
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமல்லூர்&oldid=3547174" இலிருந்து மீள்விக்கப்பட்டது