யோகம் மங்களம்
யோகம், மங்களம் ஆகிய சகோதரிகள் "யோகம் மங்களம்" என்றே அழைக்கப்பட்டார்கள். 1940களில் பிரபல நடனக் கலைஞர்களாகத் திகழ்ந்த இவர்கள், சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளனர்.[1]
யோகம் 1927-ம் வருடமும் மங்களம் 1930-ம் வருடமும் பிறந்தார்கள்...
முதன்முதலாக தமிழறியும் பெருமாள் படத்தில் இச்சகோதாரிகள் நடனமாடினார்கள். மங்களம் சிறு வயது தமிழறியும் பெருமாளாக நடித்தார்.
அதை தொடர்ந்து கண்ணாம்பா தயாரித்த ஹரிச்சந்திரா[2], ஜெகதலபிரதாபன் ஆகிய படங்களில் சகோதரிகள் நடனமாடினர்.
மகாரதி கர்ணா ஹிந்திப்படத்தில் மங்களம் மட்டும் நடனமாடினார். தெலுங்கு மாயமச்சிந்திரா (1945) திரைப்படத்தில் மங்களம் கலிங்கா கதாபாத்திரத்தில் நடித்தார்.
1947-ல் ருக்மாங்கதன் திரைப்படத்தில் மங்களம் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து ஸ்ரீ முருகன், வேதாள உலகம், சுதர்சன் ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.
சகோதரிகளில் ஐந்தடி உயரம் கொண்ட யோகத்தை விட ஐந்தே காலடி உயரமும், உயரத்திற்கேற்ற உடலமைப்பும், சினிமாவிற்கேற்ற முகவெட்டும் கொண்ட மங்களத்திற்கே படவாய்ப்புகள் அதிகம் அமைந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thamizh Ariyum Perumal 1942". தி இந்து. 7 மே 2011 இம் மூலத்தில் இருந்து 2013-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203214121/http://www.thehindu.com/arts/cinema/article1998955.ece. பார்த்த நாள்: 16 ஜனவரி 2017.
- ↑ "Harishchandra 1944". தி இந்து. 3 ஜூலை 2009 இம் மூலத்தில் இருந்து 20 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200101004641/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/harishchandra-1944/article3021653.ece.