உள்ளடக்கத்துக்குச் செல்

யெட்டி ஏர்லைன்சு வானூர்தி 691

ஆள்கூறுகள்: 28°11′51″N 83°59′06″E / 28.19750°N 83.98500°E / 28.19750; 83.98500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யெட்டி ஏர்லைன்சு வானூர்தி 691
Yeti Airlines Flight 691
விபத்து சுருக்கம்
நாள்சனவரி 15, 2023 (2023-01-15)
சுருக்கம்தரையிறங்கும் போது மோதல், விசாராணை நடைபெறுகிறது
இடம்பொக்காரா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகில், நேபாளம்
28°11′51″N 83°59′06″E / 28.19750°N 83.98500°E / 28.19750; 83.98500
பயணிகள்68
ஊழியர்4
உயிரிழப்புகள்72
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஏடிஆர் 72–500
இயக்கம்யெட்டி ஏர்லைன்சு
வானூர்தி பதிவு9N-ANC
பறப்பு புறப்பாடுதிரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம், கத்மண்டு, நேபாலம்
சேருமிடம்பொக்காரா பன்னாட்டு வானூர்தி நிலையம், பொக்காரா, நேபாளம்

எட்டி ஏர்லைன்சு பறப்பு 691 (Yeti Airlines Flight 691) என்பது நேபாளம், காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து பொக்காரா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு பறப்பில் ஈடுபடும் உள்ளூர் வானூர்தி சேவையாகும். 2023 சனவரி 15 அன்று, எட்டி ஏர்லைன்சால் பறக்கவிடப்பட்ட இரட்டை எந்திர ஏடிஆர் 72 என்ற வானூர்தி, பொக்காராவில் தரையிறங்கும் போது சேதி கண்டகி ஆற்றின் கரையில் வீழ்ந்தது.

இவ்வானூர்தியில், 15 வெளிநாட்டினர் உட்பட 68 பயணிகளும் நான்கு பணியாளர்களுமாக மொத்தம் 72 பேர் இருந்தனர். இது 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு நேபாளத்தின் மிக மோசமான வானூர்தி விபத்தும், ஏடிஆர் 72 ரக வானூர்தியின் மிக மோசமான விபத்தும் ஆகும்.[1]

விபத்து

[தொகு]
வெளி ஒளிதங்கள்
காத்மாண்டு நோக்கிச் சென்ற பொக்காராவில் ஏடிஆர் விமானம் விபத்துக்குள்ளான திகிலூட்டும் கடைசி தருணங்கள்
விமானத்தின் உள்ளே விபத்தின் நேரடி ஒளிபரப்பின் ஒரு பகுதி

பொக்காரா நேபாளத்தின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமும், நேபாளத்தின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். பொக்காரா பன்னாட்டு வானூர்தி நிலையம் 2023 சனவரி 1 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது, நகரின் பழைய பொக்காரா வானூர்தி நிலையத்திலிருந்து படிப்படியாக இது செயல்பாடுகளை எடுத்துக் கொண்டது.[2][3]

உள்ளூர் நேரம் காலை 10:33 இற்கு கத்மண்டில் இருந்து இவ்வானூர்தி புறப்பட்டது.[4] இது தரையிறங்கும் போது பழைய வானூர்தி நிலையத்திற்கும் புதிய நிலையத்திற்கும் இடையில் உள்ள சேத்தி கந்தகி ஆற்றின் கரையில் விபத்துக்குள்ளானது.[5] விபத்திற்கு சற்று முன் எடுக்கப்பட்ட ஒரு காணொளி, விபத்துக்குள்ளாகும் முன் வானூர்தி இடதுபுறமாக செங்குத்தாக இறங்கியதைக் காட்டியது.[6]

இந்த விபத்தின் விளைவாக வானூர்தியில் இருந்த அனைத்து 72 பேரும் இறந்தனர். விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில் மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.[7] [8] 1992 இல் பாக்கித்தான் பன்னாட்டு ஏர்லைன்சு வானூர்தி 268 விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாளத்தின் மிக மோசமான விபத்து இதுவாகும்.[9] இது நேபாள வரலாற்றில் மூன்றாவது மிக மோசமான வானூர்தி விபத்து ஆகும்.[10]

பொக்காரா பன்னாட்டு வானூர்தி நிலைய அதிகாரியின் கூற்றுப்படி, வான் போக்குவரத்து கட்டுப்பாடு விமானத்தை ஓடுபாதை 30 இல் தரையிறக்க அனுமதித்தது, ஆனால் வானூர்தியின் ஓட்டுநர் ஓடுபாதை 12 ஐக் கோரினார். நேபாள அதிகாரி ஒருவர், வானிலை தெளிவாக இருந்ததாகவும், ஆரம்பத் தகவல்களின்படி விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுதான் விபத்துக்கான காரணம்" என்றும் தெரிவித்தார்.[11]

விமானம்

[தொகு]

விபத்துக்குள்ளான விமானம் ஏ.டி.ஆர் 72-500 என்ற வகையை சேர்ந்ததாகும். இதன் வரிசை எண் 754 மற்றும் பதிவு 9என்-ஏ.என்.சி ஆகும்.[12] முதன்முதலில் கிங்பிசர் ஏர்லைன்சுக்கு 2008 ஆம் ஆண்டில் வி.டி-கே.ஏ.ஜே ஆக வழங்கப்பட்டது. பின்னர் இது 2019 ஆம் ஆண்டில் எட்டி வான்வழி நிறுவனத்திற்கு வழங்கப்படுவதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டில் எச்.எசு-டி.ஆர்.டி ஆக நோக் விமான நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.[13]

பயணிகள் பட்டியல்

[தொகு]

விமானத்தில் அறுபத்தெட்டு பயணிகளும் நான்கு நேபாள பணியாளர்களும் இருந்தனர். பயணிகளின் பட்டியலில் ஐம்பத்து மூன்று நேபாளிகள், ஐந்து இந்தியர்கள், நான்கு உருசியர்கள், இரண்டு தென் கொரியர்கள், ஓர் அர்கெந்தியர், ஓர் ஆத்திரேலியர், ஒரு பிரெஞ்சு மற்றும் ஓர் ஐரிசு ஆகியோர் அடங்குவர்.[14][15] பயணிகளில் இரண்டு கைக்குழந்தைகளும் இருந்தன.[14]

விமானத்தில் மூத்த தலைவர் கமல் கேசி தலைமை விமானியாகவும் அஞ்சு கதிவாடா துணை விமானியாகவும் இருந்தனர்.[16]

தேசியம் பயணிகள் குழுவினர் மொத்தம்
 நேபாளம் 53 4 57
 இந்தியா 5 0 5
 உருசியா 4 0 4
 தென் கொரியா 2 0 2
 அயர்லாந்து 1 0 1
 அர்கெந்தீனா 1 0 1
 ஆத்திரேலியா 1 0 1
 பிரான்சு 1 0 1
மொத்தம் 68 4 72

விசாரணை

[தொகு]

அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையை தொடங்கியதால் விமான நிலையம் மூடப்பட்டது.[17] இந்த விபத்தைத் தொடர்ந்து நேபாள அரசு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது.

பின்விளைவு

[தொகு]

விமான நிறுவன அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையை தொடங்கியதால் விமான நிலையம் மூடப்பட்டது.[18] இந்த விபத்தைத் தொடர்ந்து நேபாள அரசு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது. இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் சோதிராதித்ய சிந்தியா இரங்கல் தெரிவித்தார்.[19] நேபாளத்தின் பிரதம மந்திரி புசுபா கமல் தகல், "இந்த சோகமான விபத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்" என்று கூறினார்.[7] நேபாள அரசாங்கம் ஐந்து பேர் கொண்ட குழுவை விசாரணைக்கு நியமித்துள்ளது.[20]

எட்டி வான்வழி நிறுவனம் சனவரி 16 திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து வழக்கமான விமானங்களையும் ரத்து செய்தது. விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ranter, Harro. "ASN accident description". Aviation Safety Network. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  2. "Pokhara takes off" (in en). Nepali Times. 6 January 2023. https://www.nepalitimes.com/uncategorized/pokhara-takes-off/. 
  3. Pokharel, Santosh (22 December 2022). "Pokhara's Old Airport to Remain Functional as CAAN Prepares to Launch Int'l Airport". República. பார்க்கப்பட்ட நாள் 1 January 2023.
  4. "Plane with 72 people onboard crashes near Nepal's Pokhara airport, 36 bodies recovered so far". India Today. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  5. "Nepal Plane Crash Updates: At least 40 bodies recovered from Nepal crash". Hindustan Times. 15 January 2023. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  6. Bhandari, Shashwat (15 January 2023). "Nepal: Moment when Yeti Airlines plane tilted mid-air before it crashed near Pokhara Airport". indiatvnews.com. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  7. "நேபாளத்தில் ஓடு பாதையில் விமானம் விழுந்து விபத்து". தினமணி. https://www.dinamani.com/world/2023/jan/15/plane-with-seventy-two-people-on-board-crashes-in-nepal-3984689.html. பார்த்த நாள்: 15 January 2023. 
  8. "At least 16 dead after passenger plane with 72 aboard crashes in Nepal". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-15. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  9. Sharma, Gopal (15 January 2023). "At least 68 killed in Nepal's worst air crash in three decades". Reuters. https://www.reuters.com/world/asia-pacific/plane-carrying-72-people-crashes-nepal-some-bodies-recovered-official-state-tv-2023-01-15/. 
  10. Thapa, Asha; Magramo, Kathleen; Pokharel, Sugam (15 January 2023). "At least 68 killed in Nepal's worst airplane crash in 30 years". CNN. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  11. "'Pokhara ATC cleared runway 30 for landing, but Yeti flight crew asked for runway 12'". nepalminute.com. 15 January 2023. https://www.nepalminute.com/detail/1619/pokhara-atc-cleared-runway-30-for-landing-but-yeti-flight-crew-asked-for-runway-12. 
  12. https://www.livemint.com/news/world/nepal-aircraft-with-68-passengers-and-4-crew-members-crashes-in-pokhara-yeti-airlines-11673762625915.html
  13. https://www.planespotters.net/airframe/atr-72-9n-anc-yeti-airlines/rzwng9?refresh=1
  14. 14.0 14.1 Sarkar, Alisha Rahaman (15 January 2023). "40 bodies recovered as plane with 72 people on board crashes in Nepal". The Independent. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  15. Hradecky, Simon (15 January 2023). "Crash: Yeti AT72 at Pokhara on Jan 15th 2023, lost height on final approach". avherald.com. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  16. Singh, Mrityunjay (15 January 2023). "Nepal Plane Crash: Co-Pilot Of Ill-Fated Flight Anju Khatiwada Was To Get Pilot Licence After Landing". ABP News. https://news.abplive.com/news/india/nepal-plane-crash-co-pilot-of-ill-fated-flight-anju-khatiwada-was-to-get-pilot-licence-after-landing-1575886. 
  17. Bureau, ABP News (2023-01-15). "At Least '16 Dead' In Nepal As Passenger Plane With 72 Persons Onboard Crashes At Pokhara Airpo". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  18. Bureau, ABP News (15 January 2023). "At Least '16 Dead' In Nepal As Passenger Plane With 72 Persons Onboard Crashes At Pokhara Airpo". news.abplive.com. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  19. "Nepal tragedy: Embassy tweets about Indians aboard plane, helpline". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 15 January 2023 இம் மூலத்தில் இருந்து 15 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230115113840/https://www.hindustantimes.com/india-news/extremely-unfortunate-scindia-others-react-to-nepal-plane-tragedy-101673769237343.html. 
  20. "Yeti aircraft crash update". mteveresttoday.com. 15 January 2023. Archived from the original on 15 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. Pokharel, Asha Thapa,Kathleen Magramo,Sugam (15 January 2023). "At least 68 killed in Nepal's worst airplane crash in 30 years". CNN. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)