யூவால் நுவா அராரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூவால் நுவா அராரி

யூவால் நுவா அராரி (Yuval Noah Harari 24 பிப்பிரவரி 1976) என்பவர் இசுரேலிய வரலாற்றாசிரியர் ஆவார். இவர் செருசலேம் ஈப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவருடைய வரலாற்று நூல்கள் அண்மையக் காலத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.[1]

வாழ்க்கைக்குறிப்புகள்[தொகு]

இசுரேலில் உள்ள ஐபாவில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த யூவால் நுவா அராரி, செருசலம் ஈப்ரு பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தார். ஆக்சுபோர்ட்டில் ஆய்வுப் பட்டம் பெற்றார். இவர் ஒரு தீவிர காய்கறி உணவினர். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தியானம் செய்கிறார். விபசான்னா முறை தியானம் இவர் வாழ்க்கையை மாற்றியது என்று கூறியிருக்கிறார்.[2] இவர் ஒரு ஒருபாலினச் சேர்க்கையர் ஆவார்.

நூல்கள்[தொகு]

சேபியன்ஸ்--மனிதகுல வரலாறு என்ற நூல் 2014 இல் இவர் எழுதி வெளிவந்த நூல் ஆகும். ஹோமோ டியூஸ்--நாளைய வரலாறு என்ற மற்றொரு நூல் 2015 இல் இவர் எழுதி ஈப்ரு மொழியில் வெளிவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பெற்றது. இந்த இரண்டு நூல்களும் உலக அளவில் அதிகளவு விற்பனை ஆகி உள்ளன.[3] மனித குல வரலாறு குறித்து யூ டியூபில் இவர் ஆற்றிய பேச்சை பல்லாயிரம் இசுரேலியர்கள் காணவும் கேட்கவும் செய்தனர்.[4]

அராரியின் இந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன :

கருத்துகள்[தொகு]

மனித இனத்தின் இற்றைக் கால வளர்ச்சி, இனி வரும் காலத்தில் மனிதர்களின் நிலை, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்களா போன்றவற்றை எழுதி வருகிறார். செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் தளம் விரிவடைந்து வருவதால் 2050 ஆம் ஆண்டு வாக்கில் எதற்கும் பயன்படாத ஒரு வகையான மனிதர்கள் இருப்பார்கள் என்பது இவரது கணிப்பு.

வேலையில்லாதவர்கள் தொகையை விட எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாமல் இருப்பவர்கள் மிகுதியாக இருப்பார்கள் என்று கருத்துக் கொண்டுள்ளார்.

அளவுக்கு அதிகமாக உண்பதாலும் உடல் பருமனாக இருப்பதாலும் மக்கள் இறப்பது அதிகமாக உள்ளது. இந்த வகையில் செத்துப் போகிறவர்கள் பயங்கரவாத வன்முறைகளில் இறப்பவர்களைவிட மிகுதி.

விலங்குகளைப் பாதுகாக்கவேண்டும்; விவசாயத்தைப் பேணவேண்டும் என்று கருதுகிறார்.

மேலும் பார்க்க[தொகு]

  • Official website
  • Meet the author – Yuval Harari video interview – BBC News
  • Yuval Noah Harari at TED

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூவால்_நுவா_அராரி&oldid=3256197" இருந்து மீள்விக்கப்பட்டது