யுவான் ஒசே எலுயார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுவான் ஒசே எலுயார்
Juan José Elhuyar
பிறப்பு15 சூன் 1754
லொக்ரோனோ
இறப்புசெப்டம்பர் 20, 1796(1796-09-20) (அகவை 42)
பொகோட்டா, நியூகிரனடா
தேசியம்எசுப்பானியர்
துறைவேதியியல்
கனிமவியல்
அறியப்படுவதுதங்குதன்

யுவான் ஒசே எலுயார் உலூபிசெ (Juan José Elhuyar Lubize, 15 சூன் 1754 - 20 செத்தெம்பர் 1796) எசுப்பானிய வேதியியலாளரும் கனிமவியல் அறிஞரும் ஆவார். 1783ஆம் ஆண்டில் தனது உடன்பிறந்தோனாகிய பாவுத்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாகத் தங்குதன் என்ற தனிமத்தைக் கண்டறிந்தார்.

இவர் வடக்கு எசுப்பானியாவில் உள்ள உலோக்குரோனவு நகரில் பிரான்சியப் பாசுக்கு இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானியப் பேராட்சிக்கு உட்பட்ட நியூ கிரானடா, சந்தாப்பு தெ பொகோடா நகரில் இறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஒசே_எலுயார்&oldid=1866002" இருந்து மீள்விக்கப்பட்டது