யுரேனைல் ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனைல் ஆக்சலேட்டு
Uranyl oxalate
பெயர்கள்
வேறு பெயர்கள்
யுரேனைல் ஆக்சலேட்டு முந்நீரேற்று; யுரேனைல் ஆக்சலேட்டு நீரேற்று
இனங்காட்டிகள்
2031-89-2
ChemSpider 11588161
InChI
  • InChI=1S/C2H2O4.2O.U/c3-1(4)2(5)6;;;/h(H,3,4)(H,5,6);;;/q;;;+2/p-2
    Key: PRWGGWFEEGTKSV-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22717423
SMILES
  • C(=O)(C(=O)[O-])[O-].O=[U+2]=O
பண்புகள்
UO2C2O4
வாய்ப்பாட்டு எடை 358 கி/மோல் (412 கி/மோல், முந்நீரேற்றாக)
தோற்றம் வெளிர் மஞ்சள்
சிறிதளவு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யுரேனைல் ஆக்சலேட்டு (Uranyl oxalate) UO2C2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் தூள் நிலையில் இது காணப்படுகிறது. அணு எரிபொருள் சுழற்சியின் முன்னும் பின்னுமான தொழில்துறை அணுசக்தி செயல்முறைகளில் இது பெரும்பாலும் உருவாகிறது. நீருறிஞ்சும் தன்மை காரணமாக, யுரேனைல் ஆக்சலேட்டு நீரிழப்பு நிலையில் அரிதாகவே காணப்படுகிறது. பொதுவாக அறை வெப்பநிலையில் முந்நீரேற்று வடிவத்தில் (UO2C2O4·3H2O)(UO2C2O4·3H2O) யுரேனைல் ஆக்சலேட்டு காணப்படுகிறது.[1] அறை வெப்பநிலையில் இந்த தூளானது P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றை சரிவு படிக அமைப்பை வெளிப்படுத்துகிறது.[2]

யுரேனைல் ஆக்சலேட்டு முந்நீரேற்றை ஆக்சாலிலிக் அமிலத்துடன் யுரேனைல் நைட்ரேட்டு அறுநீரேற்றை வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.[3]

மின்காந்தக் கதிர்வீச்சின் வெப்பப்படுத்தும் திறனை அறியப் பயன்படும் கதிர் செறிவு அளவிகளில் யுரேனைல் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thompson, Nathan B. A.; Stennett, Martin C.; Gilbert, Matthew R.; Hyatt, Neil C. (2021-01-06). "Nuclear forensic signatures and structural analysis of uranyl oxalate, its products of thermal decomposition and Fe impurity dopant". Journal of Radioanalytical and Nuclear Chemistry 327 (2): 957–973. doi:10.1007/s10967-020-07538-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0236-5731. 
  2. Jayadevan, N. C.; Chackraburtty, D. M. (1972-11-15). "The crystal and molecular structure of uranyl oxalate trihydrate". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 28 (11): 3178–3182. doi:10.1107/s0567740872007691. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. 
  3. Tel, H; Bülbül, M; Eral, M; Altaş, Y (November 1999). "Preparation and characterization of uranyl oxalate powders". Journal of Nuclear Materials 275 (2): 146–150. doi:10.1016/s0022-3115(99)00119-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. Bibcode: 1999JNuM..275..146T. http://dx.doi.org/10.1016/s0022-3115(99)00119-1. 
  4. Bryce-Smith, D. (1971) (in en). Photochemistry. Royal Society of Chemistry. பக். 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85186-015-2. https://books.google.com/books?id=iy8xBTl-XjcC&pg=PA279. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனைல்_ஆக்சலேட்டு&oldid=3619000" இலிருந்து மீள்விக்கப்பட்டது