கதிர் செறிவு அளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிர் செறிவு அளவி என்ற கருவி சுல்சு வயோல் (Jules Violle) வடிவமைத்தார். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை அறிய உதவுகிறது.

கதிர் செறிவு அளவி (Actinometers) என்ற கருவி மின்காந்தக் கதிர்வீச்சின் வெப்பப்படுத்தும் திறனை அறியப் பயன்படுகிறது. வானிலையியலில் சூரிய ஒளிவீச்சை அளக்க கதிரவ அனல்மானி, சூரியக்கதிர்வீச்சு செறிவுஅளவி (Pyranometer) மற்றும் இருபக்கக் கதிர்வீச்சு அளவி (Net radiometer) எனப் பல கதிர் செறிவு அளவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கதிர் செறிவு அளவி என்பது ஒரு நொடிக்கு உள்ளே நுழையும் ஒளியணுக்களின் எண்ணிக்கையை அளக்க உதவும் ஒரு இயற்பியல் அல்லது வேதியியல் கருவியாகும். இக் கருவி கட்புலனாகும் நிறமாலை மற்றும் புற ஊதாக் கதிர் நிறமாலை ஆகியவற்றின் கதிர் செறிவை அளக்க பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக, இரும்பு (III) ஆக்சலேட் கரைசல், வேதியியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. வெப்பக் கதிர் அளவி, வெப்பமின்னடுக்கு மற்றும் ஒளி இருவாய் (photodiode) ஆகியவை இயற்பியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. இவை கொடுக்கும் அளவுகள் ஒளியணுக்களின் எண்ணிக்கையை ஒப்பிட உதவுகிறது.

வரலாறு[தொகு]

1825 ல் கதிர் செறிவு அளவியை சான் எர்ழ்செல் வடிவமைத்தார். ஆக்டினோமீட்டர் (Actinometer) என்ற பெயரை இவரே தேர்ந்தெடுத்தார்.[1]

கதிர் செறிவு வரைபடம் என்பது புகைப்படத் துறையில் தேவைப்படும் ஒளியின் அளவை கதிர் செறிவின் திறனைக் கொண்டு அளக்க உதவுகிறது.

வேதியியல் கதிர் செறிவு அளவி[தொகு]

வேதியியல் கதிர் செறிவியல் வேதி வினையின் மூலம் கதிர்வீச்சுப் பாயத்தை அளக்கிறது. குவாண்ட்டம் பலனுடன் (quantum yield) கூடிய வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

கதிர் செறிவு அளவியை தேர்ந்தெடுத்தல்[தொகு]

இரும்பு (III) ஆக்சலேட் கரைசல், பொதுவாக கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. (254 nm முதல் 500 nm வரை) இடைப்பட்ட அலைநீளங்களுக்கு இக்கரைசல் பயன்படுகிறது. மலக்கைற்றுப்பச்சை (malachite green) லுயுகோசயனைடுகள் (leucocyanides) ஆகிய கரைசல்களும் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. பியூடிரோஃபீனோன் மற்றும் பைபர்லீன் (piperylene) ஆகிய கரிமச் சேர்மங்கள் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது.[2] [3][4][5][6]

கட்புலனாகும் நிறமாலையை அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவி[தொகு]

மீசோ-டைபீனைல்கெலியாதெரேன் (Meso-diphenylhelianthrene) என்ற கட்புலனாகும் நிறமாலையை (400–700 nm) அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Science, American Association for the Advancement of (April 25, 1884). "Notes and News". Science 3 (64): 527. doi:10.1126/science.ns-3.64.524. Bibcode: 1884Sci.....3..524.. https://books.google.com/books?id=h6zq_tFWAvUC&pg=PA527&dq=herschel+actinometer#v=onepage&q=herschel%20actinometer&f=false. 
  2. Calvert, Jack G; James N Pitts (1966). Photochemistry. New York: Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-13091-5.
  3. Taylor, H. A. (1971). Analytical methods techniques for actinometry in Analytical photochemistry and photochemical analysis. New York: Marcel Dekker Inc.
  4. Rabek, J. F. (1982). Experimental methods in Photochemistry and Photophysics. Chicester: Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-90029-X.
  5. Anastasio, Cort; McGregor K.G. (2001). "Chemistry of fog waters in California's Central Valley: 1. In situ photoformation of hydroxyl radical and singlet molecular oxygen". Atmospheric Environment 35 (6): 1079–1089. doi:10.1016/S1352-2310(00)00281-8. Bibcode: 2001AtmEn..35.1079A. https://archive.org/details/sim_atmospheric-environment_2001_35_6/page/1079. 
  6. Chu, L; Anastasio, C. (2003). "Quantum Yields of Hydroxyl Radical and Nitrogen Dioxide from the Photolysis of Nitrate on Ice". Physical Chemistry A 107 (45): 9594–9602. doi:10.1021/jp0349132. Bibcode: 2003JPCA..107.9594C. 
  7. Brauer H-D; Schmidt R; Gauglitz G; Hubig S (1983). "Chemical actinometry in the visible (475-610 nm) by meso-diphenylhlianthrene". Photochemistry and Photobiology 37 (6): 595–598. doi:10.1111/j.1751-1097.1983.tb04526.x. 

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_செறிவு_அளவி&oldid=3520719" இலிருந்து மீள்விக்கப்பட்டது