யுனிட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கோலாவின் முழுமையான விடுதலைக்கான தேசிய ஒன்றியம்
National Union for the Total Independence of Angola
தலைவர்இசாயசு சமக்குவா
நிறுவனர்ஒனாசு சவிம்பி,
அந்தோனொயோ டா கொஸ்டா பெர்னான்டசு
தொடக்கம்மார்ச் 13, 1966
தலைமையகம்லுவாண்டா, அங்கோலா
இளைஞர் அமைப்புஅங்கோலாவின் புரட்சிகர ஒன்றிய இளையோர்
பெண்கள் அமைப்புஅங்கோலா பெண்கள் முன்னணி
கொள்கைபழைமைவாதம்[1]
மாவோவியம் (வரலாற்று ரீதியாக)[2]
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி
தேசிய அரசுப் பேரவையில் உறுப்பினர்கள்
32 / 220
கட்சிக்கொடி
Flag of UNITA.svg
இணையதளம்
unitaangola.org

அங்கோலாவின் முழுமையான விடுதலைக்கான தேசிய ஒன்றியம் (National Union for the Total Independence of Angola, UNITA, யுனிட்டா) என்பது அங்கோலா நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகும். 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கட்சி, அங்கோலாவின் விடுதலைக்கான போரில் (1961–1975) அங்கோலா மக்கள் விடுதலை இயக்கத்துடன் இணைந்து பங்குபற்றியது. பின்னர் 1975-2002 காலப்பகுதியில் அங்கோலாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கத்தினருக்கு எதிராகப் போரிட்டது. இந்த உள்நாட்டுப் போர் பனிப்போர்க் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. யுனிட்டா அமைப்பு அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடம் இருந்து இராணுவ உதவிகளைப் பெற்றது. அதே வேளையில் மக்கள் விடுதலை இயக்கம் சோவியத் ஒன்றியம், மற்றுமதன் கூட்டு நாடுகளிடம் இருந்தும் உதவிகளைப் பெற்றது.[3]

யுனிட்டா அமைப்பு ஜொனாசு சவிம்பி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. சவிம்பி 2002 இல் இறக்கும் வரை அவ்வமைப்பின் தலைவராக இருந்தார். இதன் பின்னர் இசாயசு சமக்குவா என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சவிம்பியின் இறப்புக்குப் பின்னர், யுனிட்டா அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு நேரடி அரசியலில் இறங்கியது. 2008 தேர்தல்களில் இக்கட்சி 220 தொகுதிகளில் 16 இடங்களைக் கைப்பற்றியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Consulado Geral de Angola
  2. "Angola-Emergence of UNITA". 20 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Obituary: Jonas Savimbi, Unita's local boy, பெப்ரவரி 25, 2002. பிபிசி.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுனிட்டா&oldid=3226275" இருந்து மீள்விக்கப்பட்டது