யானைக் கொழிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யானைக் கொழிஞ்சி
Entada rheedii04.jpg
யானைக் கொழிஞ்சி கனி மொசாம்பிக்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Entada
இனம்: E. rheedii
இருசொற் பெயரீடு
Entada rheedii
Spreng.[1]
வேறு பெயர்கள்

E. monostachya DC.
E. pursaetha DC.

யானைக் கொழிஞ்சி அல்லது சில்லு, இரிக்கி, வடவள்ளி (அறிவியல் பெயர் Entada rheedii ) என்பது ஒரு தாவரமாகும். இது ஒரு பெரிய மரக் கொடியாகும். ஏறத்தாழ 30 மீட்டர் உயரத்திற்கு மரங்களைப் பற்றி வளரக்கூடியதாக இக்கொடி உள்ளது.

விளக்கம்[தொகு]

இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் இந்தத் தாவரம் காணப்படுகிறது. மார்ச் - மே மாதங்களில் பூக்கள் பூக்கின்றன. பல பூக்கள் பூத்தாலும் அதில் ஒரு சில மட்டும் கனிகளாகின்றன. கனிகள் இரண்டு அல்லது ஆறு அடி உயரம்வரை காணப்படலாம். இந்தக் கனிகளின் மிகப்பெரிய உருவம்தான் இந்தத் தாவரத்துக்கு யானைக் கொழிஞ்சி என்ற பெயர்வரக் காரணம். இந்தக் கனிகள் அதன் உயரத்துக்கு ஏற்ப 5 முதல் 30 விதைகளைப் பெற்றிருக்கும். விதைகள் வட்ட வடிவமாகவும், பளபளப்பாகவும், வழவழப்பான பரப்பைக் கொண்டு, பெரிய புளியங்கொட்டையைப் போல, அடர் பழுப்பு அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இந்தக் கனிகள் முற்றிலும் வளர எட்டு மாதங்கள் ஆகும். கனி வெடித்து விதைகள் பரவ மேலும் ஓர் ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும்.[2]

ஆப்பிரிக்காவில் பாரம்பரிய பயன்[தொகு]

இத்தாவரம் ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவத்தில் ஒளிமயமான கனவுகள் தூண்டும் ஆற்றல் உள்ளதாக கருதி பயன்படுத்தப் படுகிறது. இதன் விதையின் உள்ளே உள்ள பருப்பு நேரடியாகவோ உண்ணப்படுகிறது அல்லது இறைச்சி, பருப்பு, உலர்ந்த புகையிலை போன்ற இதர மூலிகைகள் கலந்து தான் விரும்பிய கனவுகள் வருவதற்காக தூங்கும் முன் புகைபிடிக்கின்றனர்.[3] இந்த தாவரத்தின் பாகங்களை அரைத்து மஞ்சள் காமாலை , பல்வலி , புண்கள், தசை-எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு மேல்பூச்சாக களிம்பு போல் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்கின்றனர்.[4] இதன் விதைகள் நல்ல அதிர்ஷ்டம் கொண்டதாக கருதி அணிகலனாக பயன் படுத்தும் பழக்கமும் அங்கு உள்ளது.

பரவல்[தொகு]

இத்தாவரம் ஆபிரிக்காவில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு குறிப்பாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் பரவியுள்ளது. கென்யா , தான்சானியா , உகாண்டா , கமரூன் , ஈக்குவடோரியல் கினி , காபோன் , சையர் , ஐவரி கோஸ்ட் , கானா , கினி , கினி-பிஸ்ஸாவ் ,லைபீரியா , நைஜீரியா , செனகல் , சியாரா லியோன் , டோகோ , மலாவி , மொசாம்பிக் , ஜிம்பாப்வே , குவாஸுலு-நடால் , வங்காளம் , பூட்டான் , இந்தியா , நேபால் , இலங்கை ,கம்போடியா , லாவோஸ் , மியான்மர் , தாய்லாந்து , வியட்நாம் , இந்தோனேசியா , மலேசியா , பப்புவா நியூ கினி , பிலிப்பைன்ஸ் , குயின்ஸ்லாந்து போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

படக்காட்சியகம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைக்_கொழிஞ்சி&oldid=2755410" இருந்து மீள்விக்கப்பட்டது