யாகூ! மின்னஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாஹூ! மெயில்
Ymailbetalogo.gif
Yahoo mail beta.png
இலவச யாஹூ! மெயில் அஞ்சற்பெட்டியின் பார்வை.
உரலி யாஹூ! மெயில்
தளத்தின் வகை மின்னஞ்சல், இணைய மின்னஞ்சல்
உரிமையாளர் யாஹூ!
உருவாக்கியவர் யாஹூ!
வெளியீடு 8 அக்டோபர்1997
தற்போதைய நிலை சோதனைக் காலம் முடிவுற்றுள்ளது.


யாஹூ! மெயில் யாஹூ! இனால் 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இணையமூடான மின்னஞ்சல் சேவையாகும். யாஹூ! மெயிலில் 260 மில்லியன் பதிவுசெய்த பயனர் கணக்குகள் உண்டு .இன்று உலகின் மிகப் பெரும் மின்னஞ்சல் வழங்குபவராவார்.[1]. யாஹூ! மெயிலின் இன் பிரதான போட்டியாளராக ஜிமெயில், ஹொட்மெயில், ஏஐஎம் மெயில் ஆகியவை விளங்குகின்றன.

26 ஆகஸ்ட் 2007 இன்படி ஏஜாக்ஸ் இடைமுகத்திலான யாஹூ! முழுமையடைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது இவ்வசதியானது இச்சேவையானது எல்லாப் பயனர்களுக்குமே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தற்போதைய இடைமுகம் ஜூலை 2004 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் இடைமுகமானது இன்டநெட் எக்ஸ்புளோளர் 7, பயர்பாக்ஸ் மற்றும் கமினோ (எல்லா ஜிக்கோ இலான் உலாவிகள்) உலாவிகளுடன் ஒத்திசைவு. யாஹூ!வின் திட்டப்படி எல்லாச் சேவைகளையுமே இறுதியில் ஃபயர்பாக்ஸ் உலாவிக்கு ஒத்திசைவாகச் செய்வதாகும்.[2]). இதன் இடைமுகத்தை ஒபேரா மற்றும் கான்குவர் உலாவிகளூடாகவும் அணுகமுடியும் எனினும் அவற்றில் இடைமுகத்தில் சிறுசிறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

வரலாறு[தொகு]

யாஹூ! மெயிலின் வரலாறு ஜேஜே ஹேலி உடன் ஆரம்பமாகின்றது. இவர் யாஹூ! இன் ஒவ்வொரு உள்வாங்கலிலும் சம்பந்தப்பட்டுள்ளார். "உங்களுக்காக உழைப்பவர்களே உங்களின் வணிகத்தை" சரியாக அறிவார்கள் என இவர் கூறினார். இவரைப் பொறுத்தவரையில் எப்பொழுதுமே மூன்று பிரதான கேள்விகளே இவரிடம் இருக்கும் அவையானது "விருத்தி செய்வதா, வாங்குவதா அல்லது குத்தகைக்கு எடுப்பதா?" இதற்கான விடையானது அதன் போட்டியாளர்களைப் பொறுத்தும் நிறுவனத்தின் நிலையைப் பொறுத்தும் அமையும்.

வசதிகள்[தொகு]

இலவச சேவையில்[தொகு]

யாகூ மின்னஞ்சல் தமிழில்
 • அளவற்ற மின்னஞ்சற் சேமிப்பு அளவு
 • 10 மெகாபிட்டுகள் இணைப்புக்களைச் மின்னஞ்சலில் சேமிக்கும் வசதி.
 • எரிதங்கள் (Spam) மற்றும் கணினி நச்சுநிரல்களுக்கு(Virus) எதிரான பாதுகாப்பு
 • ஏனைய மின்னஞ்சலில் இருந்து POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறும் வசதி
 • 4 மாதங்களாகப் புகுபதிகை செய்யதாத பயனர்களின் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்படும். [சான்று தேவை]

கட்டணம் செலுத்திய பிளஸ் பதிப்பு[தொகு]

Yahoo mail pop access and forwarding.PNG

குறிப்பு: இலவச சேவையிலும் POP3 முறையில் அனுமதிக்கின்றார்களெனினும் இச்சேவை எல்லாருக்குமா என்பது தெளிவான விளக்கம் இல்லை.

 • அளவற்ற மின்னஞ்சற் சேமிக்கும் அளவு.
 • 20MB இணைப்புக்களைச் மின்னஞ்சலில் சேமிக்கும் வசதி.
 • POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறுதல். இதன் மூலமாக மைக்ரோசாப்ட் அவுட்லுக், யூடோரா போன்றவற்றூடாகவும் மின்னஞ்சலைப் பெறும் வசதி.
 • குப்பை அஞ்சல் மற்றும் கணினி வைரஸ்களிற்கு எதிரான பாதுகாப்பு
 • ஏனைய மின்னஞ்சலில் இருந்து POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறும் வசதி
 • ஆண்டிற்கு 19.9 அமெரிக்க டாலர்களைச் செலுத்தவேண்டும்

POP3 முறையில் பிறிதோர் மின்னஞ்சல் சேவை வழங்குபவரில் இருந்து யாகூமெயிலிற்கு மின்னஞ்சலைப் பெறுதல்[தொகு]

Yahoo mail options.PNG

இது யாஹூ!விற்கே உரிய சிறப்பான ஓர் வசதியாகும் இவ்வசதியோ அல்லது இதற்கு ஈடான வசதியோ இதன் பிரதான போட்டியாளர்களான ஹொட்மெயில் கிடையாதெனினும் ஜிமெயில் இவ்வசதியை டிசம்பர் 2006 இல் யாஹூ! வைப் பின்பற்றி ஆரம்பித்து வைத்தது. சில பாது்காப்புச் சுவர்கள் (Firewall) அல்லது Routers காரணமாக சில மின்னஞ்சல் சேவைவழங்குனர்களில் இருந்து உங்கள் மின்னஞ்சலைப் பெறமுடியாதிருக்கலாம் ஏனெனில் POP3, SMTP முறையில் பாவிக்கப்படும் Ports தடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் யாஹூ! மெயில் யாஹூ! செர்வரில் இருந்தே இயங்குவதால் யாஹூ! மெயில் உங்களின் மின்னஞ்சல் சேவை வழங்குனரை அடையக் கூடியதாக இருக்கும். இதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

 1. அதாவது யாஹூ!மெயிலில் பயனர் பெயர் கடவுச் சொல்லைக் கொடுத்து உள்நுழையவும்
 2. Mails pulldown menu ஐக் கிளிக் பண்ணி அதில் Options (விருப்பத்தேர்வுகள்) ஐத் தெரிவு செய்யவும்
 3. அதில் Management இற்குகுக்கீழ் mail address (மின்னஞ்சல் முகவரி) என்பதைத் தெரிவு செய்யவும்
 4. Add (சேர்) ஐக் கிளிக் பண்ணவும்
 5. Account Name (மின்னஞ்சல் முகவரி) ஏதாவது பொருத்தமான பெயரை இடவும்
 6. Mail server (மெயில் சேவர்) இல் பொருத்தமான பெயரை இடவும் எடுத்துக்காட்டாக, Username இல் பயனர் பெயரையும், Password இல் உங்கள் கடவுச் சொல்லையும் இடுக.
 7. இப்போது மீண்டும் யாகூ! மெயிலிற்கு வரும் போது உங்கள் மின்னஞ்சற் கணக்கும் தோன்றுவதை அவதானிக்கலாம்(கவனிக்கலாம்). இதைக் கிளிக் செய்தால் உங்கள் மின்னஞ்சல் யாகூமெயிலிற்கு வந்துவிடும்.
 8. சில மெயில் சேவரில் இருந்து பெறமுடியாவிட்டால் அந்த மின்னஞ்சலில் உள்ள Edit இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளிற்குச் சென்று
 • Leave Mail on Mail server
 • Retrieve new mails only

என்பதற்கு முன்னாலுள்ள சரி அடையாளத்தை எடுத்துவிடவும்.

POP3 முறையில் யாஹூ!மெயிலைப் பெறுதலும் SMTP முறையில் அனுப்புதலும்[தொகு]

Yahoo! free pop access.PNG

ஆரம்பத்தில் யாஹூ!பொப்ஸ் அல்லது யாஹூ!பாப்ஸ் என்றழைக்கப்பட்ட அல்லது இன்று வைபொப்ஸ் அல்லது வைபாப்ஸ் என்றழைக்கப்படும் இலவச மென்பொருளூடாகவே யாஹூ!மெயில் கையாளப்பட்டது. இன்று யாஹூ! ஆனது நேரடியாகவே கையாள அனுமதிக்கின்றது.

நேரடியாகக் கையாள[தொகு]

படத்தில் உள்ளவாறு அல்லாமல் SMTP முறையில் மின்னஞ்சல் அனுப்பவேண்டும் எனில் Out Going Mail இற்குக் கீழ் My Server Requires Authentication எனபதையும் தெரிவுசெய்யவும்
 • யாஹூ!மெயிலில் உலாவியூடாக உள்நுளையவும். நீங்கள் யாகூ! மெயில் பீட்டாவைப் பயனபடுத்தினால் Mail ஐக் கிளிக் பண்ணி POP and Mail Forwarding ஐத் தெரிவு செய்யவும் திரையில் அவர்கள் சேவையை மேம்படுத்துவதாகச் செய்தியைத் தரும் நீங்கள் Setup என்பதைக் கிளிக் செய்தால் முன்னைய யாகூ மெயிலிற்கு இட்டுச் செல்லும். இனி யாஹூ! மெயிலில் நுழைந்தபின்னர் Mail pull down menu இலிருந்து mail என்பதைத் தெரிவு செய்யவும்
 • POP access and Forwarding என்பதைத் தெரிவு செய்யவும்.
 • அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும் (முதற்தடவை மாத்திரம்) [3]
 • மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது OE (அவுட்லுக் எக்ஸ்பிரஸ்) இல் tools menu ->Accounts-> Add ->Mail ->
  • POP3 சேவராக பொதுவாக pop.mail.yahoo.com ஐயும் அல்லது உங்கள் யாஹூ! மெயில் சேவர் வேறு ஓர் இடத்தில் இருந்தால் எடுத்துக்காட்டாக இராச்சியத்தில் இருப்பின் pop.mail.yahoo.co.uk என்றவாறும்
  • SMTP சேவராக smtp.mail.yahoo.com ஐயும் தெரிவு செய்யவும் (இங்கும் மேலேயுள்ளவாறு அமெரிக்கா அல்லாத ஒருநாட்டில் உள்ள யாஹூ! செர்வர் மூலமாக எடுத்துக்காட்டாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மெயிலை சேவரில் இருந்து பெறவேண்டும் என்றால் smtp.mail.yahoo.co.uk என்றவாறு தெரிவுசெய்யவும். முக்கியம் யாஹூ!மெயிலின் SMTP port 587 ஆகும் (வழமையாக SMTP port 25 என்பதையும் கவனிக்கவும்).
 • இப்போது மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ஊடாக யாகூ!மெயிலைப் பேறமுடியும்.[4]

வைபொப்ஸ் ஊடாக[தொகு]

குறிப்பு: முன்னர் இம்மென்பொருளானது யாஹூ!பொப்ஸ் அல்லது யாஹூ!பாப்ஸ் என்றழைக்கப்பட்டது.

 • வைபொப்ஸ் மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி்க்கொள்ளவும்.
 • சில வலையமைப்புக்களில் மேற்கூறிய (அதாவது நேரடியாக யாகூ! மெயிலுடன்) இணையமுடியாத இடங்களில் இதுவே ஒர் மாற்று வழியாகும்.
 • POP3 மற்றும் SMTP சேவர் இரண்டும் இங்கு localhost (அல்லது 127.0.0.1 ஐ localhost இற்குப்பதிலாகப்) ஆகும்.
 • இப்போது மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் (OE) அலது மொஸிலா தண்டபேட்டினூடாக யாகூ!மெயிலைப் பார்வையிடமுடியும்.

உள்ளிணைந்த உரையாடல் வசதி[தொகு]

யாஹூ!மெயில் தனது பிந்தைய பதிப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளிணைந்த உரையாடல் வசதியை வழங்கியுள்ளது. இதனால் யாஹூ! மெசன்ஜர் இல்லாமலே யாஹூ!மெசஞ்சர் மற்றும் வின்டோசு லைவ் மெசஞ்சர் பயனர்கள் உரையாடக் கூடியதாக இருக்கும். எனினும் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு அடோபி பிளாஷ் மென்பொருள் உலாவியில் இருக்கவேண்டும். இது ஜிமெயில் சேவைக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதெனினும் ஜிமெயிலின் உள்ளிணைந்த உரையாடலுக்கு அடோபி பிளாஷ் மென்பொருள் அவசியம் இல்லை.

இவற்றையும் பார்க்க[தொகு]

 • ஜிமெயில், கூகுளின் துணைச் சேவையை ஜிமெயில் சேவை

வெளியிணைப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_மின்னஞ்சல்&oldid=1497227" இருந்து மீள்விக்கப்பட்டது