யமுனா பிரசாத் சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யமுனா பிரசாத் சாஸ்திரி (Yamuna Prasad Shastri)[1] இந்திய மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப்பிரதேசத்தின் ரேவா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய லோக் தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார். பின்னர், ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணியில் இருந்தார். இவர் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். [2] 1955 ஆம் ஆண்டில் இவர் கோவா விடுதலை இயக்கத்தின் போராட்டங்களில் பங்கு பெற்றார். தனது வலது கண் பார்வையை போர்த்துக்கீசிய காவல்துறையின் தாக்குதலால் இழந்த இவர் 1975 ஆம் ஆண்டில் முழுமையாகப் பார்வையை இழந்தார்.[3] இவருடைய நினைவாக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அர்ப்பணிக்கப்பட்டன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unseen India On The Eve Of Elections". https://archives.peoplesdemocracy.in/2004/0404/04042004_suneet.htm. 
  2. Members Bioprofile[தொடர்பிழந்த இணைப்பு]
  3. XI LOK SABHA DEBATES, Session V (Monsoon)
  4. indcareer.com. "Yamuna Prasad Shastri College, Semaria" (in en). https://www.indcareer.com/madhya-pradesh/rewa/yamuna-prasad-shastri-college-semaria.