யசோதா வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யசோதா வர்மா
Yashoda Verma
சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2022–Present
முன்னையவர்தேவ்ரத்து சிங்
தொகுதிகைராகர் சட்டமன்றத் தொகுதி
பெரும்பான்மை20,000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1986 (அகவை 37–38)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம்

யசோதா நிலாம்பர் வர்மா (Yashoda Nilamber Verma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். [1] சத்தீசுகர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான யசோதா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். [2] [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

தேவ்வ்ரத் சிங்கின் மரணத்திற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, யசோதா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். பதிவான மொத்த வாக்குகள் 1,65,407 வாக்குகள் ஆகும். இவ்வாக்குகளில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் கோமல் இயாங்கேல் 67524; காங்கிரசு வேட்பாளர் யசோதா வர்மா 87,690; சத்தீசுகர் சனதா காங்கிரசு வேட்பாளர் நரேந்திர சோனி 1,218 வாக்குகள் பெற்ற்னர். மேலும் 2,480 பேர் நோட்டாவை அழுத்தியிருந்தனர்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

யசோதா 1986 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் கைராகர்-சூய்காடன்-கண்டாய் மாவட்டத்தின் கைராகர் தாலுகாவில் உள்ள தேவரிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Diwan, Sandeep. "खैरागढ़ उपचुनाव में कांग्रेस की जीत, यशोदा वर्मा ने 20 हजार मतों से BJP प्रत्याशी कोमल जंघेल को हराया". Live Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Seal, Rajashree (2022-04-16). "Congress' Yashoda Verma Wins Khairagarh Seat In Chhattisgarh With Over 20,000 Votes". Zee Media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.
  3. "The Journal of Parliamentary Information" (PDF). Lok Sabha. September 2022.
  4. "Candidate Details". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதா_வர்மா&oldid=3790460" இலிருந்து மீள்விக்கப்பட்டது