மோசாம் சாகி சந்தை
மோசம் சாகி சந்தை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | "ஓசுமானியக்" கட்டிடக்கலை |
நகரம் | ஐதராபாத்து |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 17°23′04″N 78°28′30″E / 17.384500°N 78.475052°E |
பெயர் காரணம் | மோசம் சா |
கட்டுமான ஆரம்பம் | 1933 |
நிறைவுற்றது | 1935 |
செலவு | 4 இலட்ச ரூபாய்[1] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
மூலப்பொருள் | கருங்கல் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | நகர மேம்பாட்டு வாரியம் |
மோசம் சாகி சந்தை (Moazsam Jahi Market) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தையாகும். இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, ஜாம் பாக், பேகம் பஜார் மற்றும் தொடர்வண்டி சாலையின் குறுக்கு வழியில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]1933-1935 காலகட்டத்தில், ஐதராபாத் நிசாம் ஓசுமான் அலி கானின் ஆட்சியின் போது இந்த சந்தை கட்டப்பட்டது. இது 1912 ஆம் ஆண்டு ஐதராபாத்து நகரின் வளர்ச்சிக்காக நிசாமால் நிறுவப்பட்ட நகர மேம்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. நகர்ப்புற புதுப்பித்தலின் ஒரு பகுதியாக வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [2] ஒசுமான் அலி கானின் இரண்டாவது மகனும் நகர மேம்பாட்டு வாரியத்தின் தலைவருமான இளவரசர் மோசம் சாவின் பெயரால் இந்த சந்தை அழைக்கப்பட்டது. [3] ஐதராபாத்து தொடர் வண்டி நிலையத்திற்கும் ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் வணிக இடத்தை வழங்குவதே சந்தையின் நோக்கமாக இருந்தது. [4] அந்த நேரத்தில், ஐதராபாத்தின் முதன்மை சந்தையான மிர் ஆலம் மண்டி நகரின் அதிக நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்திருந்தது. [3] எனவே அதனை மாற்றும் நோக்கத்தோடு இச்சந்தை நிறுவப்பட்டது.
இந்தக் கட்டிடம் ஒரு பழச் சந்தையாக செயல்படும் நோக்கத்தில் இருந்தது. ஆனால் நடைமுறையில் பல்வேறு வகையான பிறப் பொருட்களையும் விற்பனை செய்தது. 1980 களில், கட்டிடத்தின் பழச் சந்தை கொத்தப்பேட்டை பழச் சந்தைக்கு மாற்றப்பட்டது.
நவீன யுகம்
[தொகு]இந்த சந்தையில் கபூர் மற்றும் பிலால் என்பவர்களின் பிரபலமான ஐஸ்கிரீம் கடை உள்ளது. இவை கையால் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்களுக்கு பெயர் பெற்றவை. மோசம் சாகி சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்த ஜம்பாக் பூ சந்தை 2009 இல் குடிமல்காபூருக்கு மாற்றப்பட்டது.
கட்டிடக்கலை
[தொகு]கட்டிடம் கிரானைட் கற்களால் ஆனது. இது வளைவுகளையும் மையக் குவிமாடத்தையும் கொண்டுள்ளது. சந்தையின் கட்டிடக்கலையானது "நவீன" அல்லது "ஓசுமானியக்" கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது நகர மேம்பாட்டு வாரியத்தின் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டிடக்கலை பாணியானது மதச்சார்பின்மையைத் தெரிவிக்கும் நோக்கத்துடன் இருந்தது. மேலும் காக்கத்தியர், குதுப் சாகி, முகலாய மற்றும் ஆசப் சாகி வடிவங்களிலிருந்து பெறப்பட்டது. [2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khalidi, Omar (2008). A guide to architecture in Hyderabad, Deccan, India. Aga Khan Program for Islamic Architecture, MIT Libraries. p. 257. இணையக் கணினி நூலக மைய எண் 233637198.
- ↑ 2.0 2.1 Naik, Anuradha S. (2018-05-01), "Back into the future: The city improvement board of Hyderabad", Cities’ Identity Through Architecture and Arts, London: Routledge, pp. 221–228, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1201/9781315166551-21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-16655-1
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ 3.0 3.1 Sohoni. Taming the Oriental bazaar : architecture of the market-halls of colonial India. pp. 22–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-78917-1.
- ↑ Beverley, Eric Lewis (2013-09-01). "Urbanist Expansions: Planner-Technocrats, Patrimonial Ethics and State Development in Hyderabad". South Asia: Journal of South Asian Studies 36 (3): 388–389. doi:10.1080/00856401.2013.821050. பன்னாட்டுத் தர தொடர் எண்:0085-6401. https://doi.org/10.1080/00856401.2013.821050.